பக்கங்கள்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013


குடும்பங்கள் சமநிலையில் இருக்க சமயலறையில் சமத்துவம் நிலவவுவது அவசியம். பெண்களளின் தனித்த வெளியாக இருக்கும் அந்த பரப்பை ஆண்கள் தங்க்களுக்கும் உ ரியதாக்கிக்கொள்வது முக்கியமானது. பெண்கள் மட்டுமே அங்கு கொலோச்சுவதற்கு ஆண்கள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்
சமையல்கலையை பெண்னுக்கானதாக மட்டுமே சமூகம் கற்பிதம் செய்துவைத்துள்ளது.சமையலறையில் சாத்தியமில்லாத மாற்றம் சமூகவெளியில் சாத்தியமில்லை .
'பெண்கள் சமையல் அழகு; எனில், ஆண்கள் சமைப்பது அதனினும் அழகு' என்றாதல் தேவை .
நட்சத்திரஉணவங்களில்,திருமணவிழாக்களில் மட்டுமே சமையலி கோலோச்சும் ஆண்கள் இல்லத்திலும் தமது உரிமையைஇல்லாளிடம் இருந்து வென்றெடுக்க வேண்டும்.போலேவே,ஆண்களின் புறநிலை சமையல்வெளியில் பெண்கள் புழங்கும் நிலைக்கு பெண்களும் முன்வரல் வேண்டும்.
இந்தியச்சூழலில் இலக்கியவாதிகளைவிடவும் முற்போக்கான அம்சங்களை நடைமுறைக்கு கொண்டுவருவதில் முன்னிலை வகிப்பவர்கள் திரைப்பட நடிகைகள். இந்திநடிகை கரீனாகபூர் சொல்கிறார்: ''சைஃ ப் எனக்கு உணவு சமைக்கவேண்டும்'' .கரீனா போல் எல்லா பெண்களும் அன்றாட வாழ்வில் சமையலை ஆணுக்கும் இடமளிக்க வே ண்டும்.பெரும்பாலான பெண்கள் இதில் பின் தங்கி இருக்கிறர்கள்.
அரசியல் சமத்துவம் கோருபவர்கள் முதலில் தங்கள் சமையலறையை ஆண்களுக்குரியதாகவும் அமைப்பது காலத்தேவையாகும்.
சமூகத்தில் நிகழவேண்டும் என்று கோரும் மாற்றங்கள் இல்லத்தில் இருந்து...இல்லாள்...இல்லானில் இருந்தே மலரவேண்டும்.

திங்கள், 1 ஜூலை, 2013

கரியகூர்மூக்கு
பறைவையொன்று
கொத்தித்துன்னும்
சொப்பனத்தில்
குழந்தையின் பிஞ்சுவிரல்கள்
தேகமெங்கும்
ஸ்பரிசிக்கிறது

சனி, 29 ஜூன், 2013



                                     
       
ஜனநாயகத்தின் அடிப்படையாக தகவல்களை கொள்ளலாம். தகவல் இல்லாமல் ஜனநாயகம் தழைக்க முடியாது. தகவல்களின் அடிப்படையில் மக்கள் விணையாற்றுவார்கள். இதில் அரசுகள் திறந்த நிலையாக இயங்க வேண்டும். ஏனெனில் மக்களில்தான் அரசுகள் தங்கி இருக்கின்றன மக்களற்ற நிலையில் அரசுகள் இயங்காது. மறைத் தாழ் இன்றி திறந்த நிலையில் அரசு வினையாற்ற வேண்டும். ஆனால் இன்றைய அரசுகள் மக்ககளுக்கு தகவல்கள் கிடைக்காமல் செய்யும் எதிர்நிலை பாத்திரத்தை வகிக்கின்றன .நுட்பங்களையும் கைப்பற்றிக்கொண்டு அதிகாரம் செலுத்துகின்றன
மக்களிடம் எது மறைக்கப்படுகிறதோ அது மக்களுக்கு எதிரானது
அரசநிறுவனத்தின் பாத்திரத்தை அரசுகள் மறுக்கும்போது ஸ்நோடன், அசாஞ்ச்சே போன்றவர்கள் அரசின் பொறுப்பை கைக்கொள்கிறார்கள். .அவர்களை ஜனநாயகம் பேசும் அரசுகள் ஊக்குவிக்கவெண்டும். அவர்களின் சிறகுகளை நறுக்கக்கூடாது

வெள்ளி, 14 ஜூன், 2013

யாருடைய
சொற்களாலோ
பேசுகிறேன்
யாருடைய
ஆடைகளா
லோ
அம்மனம்
மறைக்கிறேன்
யாருடைய
பாதைகளிலோ
நடக்கிறேன்
யாருடைய
உடல்களா
லோ
புணர்கிறேன்
யாருடையதாலோ

  இயங்குகிறேன்
எனில்.
நான....
                                     
 கல்வியறைகளில்இருந்து கல்வியையும் கோவில்களில் இருந்து தெய்வங்களையும் மீட்பது ஒன்றே இரண்டும் பிழைத்திருப்பதற்கான வழி! பிரமாண்டமான கல்வியறைகள் இல்லாத காலத்திலும் கல்வி இருந்தது;கோபுரக்கோவில்கள் இல்லாத காலத்திலும் தெய்வம் இருந்தது என்பதை அறிய வேண்டும். கல்வியும் தெய்வமும் மனிதனை காயடிப்பதற்கான கருவிகளாகி விட்டன.அவற்றை மீட்பதன் மூலமாக மனிதனை மீட்கலாம்.....மீட்கப்பட்ட மனிதன் மீ மனிதனாகவும் மலரலாம்!
              

                         வீடு

நண்பருகாக வாடகைக்கு வீடு தேடினோம். உச்சிவெயில் மண்டையை பிளக்க பல வீடுகள் ஏறி இறங்கியும் அமையவில்லை. தசரதபுரத்தை ஒட்டியுள்ள மஜிப் நகரின் ஒரு தெருவுக்குள் ''வாடகை வீடு ''அறிவிப்பு அந்த வீட்டின் கதவை தட்டினோம்.நண்பர் எப்போதும் சந்தன போட்டு வைக்கும் வழக்கம் உடையவர். நேற்றும் அப்படித்தான்.நெற்றியில் சந்தனப்பொட்டு வெயிலில் ஜொலித்தது  வேர்வைத்துளிகளினுடே.கதவைத் திறந்தவர்.
.'' நாங்க இந்துக்களுக்கு வீடு கொடுக்கமாட்டோம்..எங்களுக்கு ஒழுக்கமாக இருக்கணும்..''என்று மறுத்துவிட்டார். 'சகோதர'த்துவத்தின் உச்சி மோந்து, வாழ்க நின் சமத்துவம் என்று அடுத்தா தெருவுக்குள் நுழைந்தோம்.தொதுபடுவதுபோல் இருந்த வீட்டில் பேசினால் நாங்க ஆசாரமானவங்க....பிராமின்ஸுக்கு மட்டும்தான் கொடுப்போம். ஸாரி. தப்பா நினைச்சுக்காதீங்கோ ''.மதங்களின் நீதியும் சமத்துவமும் வாழ்வுக்கு வாராது/
ஒன்றில் சாதி எனில் அதிலும் உட்கிடை மதமே இன்னொன்றில் நேரடியாக மதம்.
எமக்கு வீடு தேடிய ஒரு மங்கள் மாலையில் ஒரு வீட்டில் '' நீங்க கிறிஸ்டீனா? ''என்ற கேள்வி?... மனைவி குங்குமம் வைத்துக்கொள்ளாததால்!
என்னதான் கரடியாக கத்தினாலும் குழுவிய மனநிலையில் இருந்து மனிதன் மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்! பயத்தில் இருந்தே இவ்வாறானா சுய அடையாளத்தை ஒத்தவர்களை மனம் விரும்புகிறது....
                     

                              அரசு

அரசுகளின் வரலாறுக்கும் மனிதனின் இருப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது! மனிதனின் எழுச்சியோடு எழுந்தது அரசு! ஒரு கட்டத்தில் மனிதனை கட்டுப்படுத்தும் பாத்திரத்தை கைக்கொண்டுள்ளது.மனிதர்களை கட்டுப்படுத்த விரும்புகின்றவர்கள் அரசுகளை கட்டுப்படுத்த வேண்டும். அரசு என்ற  கருத்தாக்கம் இல்லாமல் வாழும் ஆதிக்குழுக்கள் பொதுமை பண்புகளை கொண்டியங்கும். அரசு ஒரு மிகப்பெரிய சொத்துடமை இயந்திரமாக இயங்குகிறது. இதனால்,  சொத்துடைமை ஒருபோதும் அழிக்க இயலாது. அரசு  இயங்கும் வரையில் சொத்துடமை இருக்கும்.ஒருவகையில் சொத்துடமையில் இருந்தே எழுந்தன அரசுகள். காலப்போக்கில் அரசுகளே சொத்துடமை எந்திரங்க்களாகிப்போயின!