பக்கங்கள்

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

             நடுநிசி
தவளை கத்தும் 
கார்த்திகை மாதங்களில்...
நடுநிசிகளில் நாய்களும் குரைக்கும்
முற்றத்தில் படுத்திருக்கும் 
அப்பாவின் இருமல் 
சன்னமாய் காற்றில் மிதந்து  
வீட்டிற்குள்வரும்.
பழிவாங்கத்துடிக்கும் குலதெய்வக்கதைகளும்
 கரு இருளும் விழித்து எழும்.
 ஊடுருவும் கண்களுடன் 
ஊர்ந்து செல்லும் பல்லி
அந்த இரவுகள் 
முடியவில்லை.




 
 

கருத்துகள் இல்லை: