யத்தின்கீழே முற்றத்தில் கதைகளும் விடுகதைகளும் ஊர்க்க தைகளுமாக பாட்டிகளுடன் குழந்தைகள் நேரம் கழித்தன. இன்று பாட்டிகள் இல்லாத இல்லங்கள் இருமைபடிந்து கிடக்கின்றன. பெற்றோரைக் காட்டிலும் தாத்தா-பாட்டிகள் குழந்தைகளுக்க மிக நெருக்கமானவர்களாக இருப்பதை ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வென்று உறுதி செய்கிறது.
    அண்மைக் காலமாக என் மகனுக்கு தினமும் ஒரு கதை சொல்வதை வழக்கமாக்கி இருக்கிறேன். கதை சொன்னால் தேவையில்லா பொருடகளை கேட்க மாட்டேன் என்றிருக்கிறான். நேற்று உயிர்தரும் மரம் (ஷெல் சில்வர்ஸ்டீன், தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ட்ரன்) உள்ளிட்ட சில கதைகள் சொன்னேன்.(வாசித்தேன்!).எத்தனை மகிழ்ச்சி. உலகத்தையே வென்றுவிட்டதான பூரிப்பு. தினமும் கதைகள் சொல்லச் சொல்லியிருக்கிறான்.
    குழந்தைகளை வெல்ல வேண்டுமா--? கதை சொல்லுங்கள். தந்தைகளே...!
    விரும்பு
    கருத்து
    கருத்துகள்
    Saa Vee கதைசொல்லிகள் குறைந்துவிட்டார்கள் தோழர் 
    இது வருந்தத்தக்க செய்தி
    ''ஐயருக்கு எதிரான அபவாதம்''(பிப்.2017 காலச்சுவடு) ப.சரவணன்-பொ.வேல்சாமி பதில், பா.மதிவாணன் விவாதம் (மார்ச்2017 காலச்சுவடு) ஆய்வாளர்களின்-அறிஞர்களின் நேர்மை குறித்த தெளிவை முன்வைப்பதாக உள்ளது.
    // 1894 இல் உ.வே.சா.பதிப்பித்த புறநானூறு 34 ஆம் பாடலில் இடம் பெறும் ''பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்'' என்னும் அடியில் பயின்றுவரும் 'பார்ப்பார்' என்னும் சொல்லுக்கு பதிலாக 'குரவர்' என்னும் சொல்லே இடம் பெற வேண்டும். அவர் அதை மாற்றிப் பதிப்பித்துவிட்டார் என்னும் குற்றச்சாட்டு தம...
    மேலும் காட்டு
    விரும்பு
    கருத்து
    கருத்துகள்
    Sowmiya Narayanan மேற்படி இணைப்பிலுள்ள மூன்றாவது குறிப்பு உ.வே.சா. திருத்தமெதுவும் செய்யவில்லை என்பதை அவர் பயன்படுத்திய மற்றும் இதர சுவடிகளையும் நேரில் சோதித்த உலகத் தமிழாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆதாரத்துடன் கூறியுள்ளார்.