பக்கங்கள்

புதன், 14 மார்ச், 2012

 
 
                                    துரோகம்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இருப்பு-இருப்பின்மை குறித்த விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் இருக்கிறது. இலங்கை அரசு நந்திகடலில் கொல்லப்பட்டதாக கூறியது. தற்போது சேனல்- 4   தொலைக்காட்சியும் அதை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர் தரப்பில் பல்வேறு தரப்புகள்,தளங்கள்.மறுப்பும்,. எதிர்ப்பும் தெரிவித்துக்கொண்டு. பிரபாகரன் மரணம் அடைந்திருந்தால் அதுகுறித்த யதார்த்தத்தை ஒப்புகொள்வதுதான் சரியானது .அதுதான் ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியல் திட்டமிடலுக்கு ஏற்றது. அவர் மரண செய்தி குறித்தும் அரசியல் செய்வது அவருக்கு செய்யும் அநீதி.
       சிங்கள அரசால் கொடுரமாக பிடித்துவைத்து .கொல்லப்பட்டிருந்தால் அதையும் மறைப்பும் திரிப்பும் இல்லாமல் வெளிப்படுத்துவதே அ றம். அதற்கும் பதில் அளிக்க வேண்டிய நிலை சிங்கள அரசுக்கு ஏற்படும்.அவர் கொல்லப்பட்டிருந்து...  அதை மறைப்பது...  சிங்கள அரசுக்கு செய்யும் உதவியாகவே இருக்க முடியும். இதை மறைப்பதில் அரசியல் தந்திரம் என்று எதுவும் இருக்க முடியாது. உண்மையை மக்களிடம் இருந்து மறைப்பது எந்த மக்களுக்காக அவர் போராடியதாக சொல்லப்பட்டதோ அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.
        













கருத்துகள் இல்லை: