பக்கங்கள்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

இதுவும் தமிழ்நாட்டில்தான் :ஆண்களிடம் வரதட்சனை

                 

வரதட்சனை தவறானது எனபதில் கருத்து மாறுபாடு இருக்கமுடியாது.ஒருசில இடங்களில் வரதட்சனை வாங்குவது குறைந்தும் சில இடங்களில் வரதட்சனை அதிகருத்தும் இருப்பது உண்மைதான்.முன்பு நகைகள் தட்டு முட்டு சமாங்களாக இருந்தது.பிறகு கார் பைக் என்று வளர்ந்தது.அதுவும் சென்னை போன்ற நகரங்களில்தான் மருமகனுக்கு கார் பைக் அதிகளவில் வழங்கப்படுகிறது.கிராமத்தில் இது இல்லை,இருந்தாலும்குறைவாகவே  இருக்கும்.சென்னையில் சற்று வசதியான குடும்பங்களில் வீடுகள் வாங்கி கொடுக்கப்படுகிறது.கிராமத்தில் இதற்கு வாய்ப்பே கிடையாது.எந்த பெயரில் என்றாலும் இதைஏற்றுக்கொள்ளமுடியாதுதான். ஆனால் குமரி மாவட்டத்தில் இது இருந்தாலும் அங்குள்ளவர்கள் சற்று மாறியதாக சிந்திக்கிறார்கள்.அவர்கள் பெண்ணை காட்டிக்கொடுப்பதற்கு மாப்பிள்ளையின் பெயரில் நிலம் இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள்.மாப்பிள்ளை பெயரில் நிலம்
இல்லாவிட்டால் பொண்ணு கொடுக்க சம்மதிக்க மாட்டார்கள்.என் நண்பர் ஒருவர் பிரபல த்தொளைக்காட்சியில் செய்திப்பிரிவில் பொறுப்பில் இருக்கிரார்.அவருக்கு பெண் பார்த்தபூது நிலம் இல்லை என்பதால் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர்.இப்படி பலரும் அங்கு நிலம் இல்லாமல் பெண் கிடைக்காமல் வேதனைப்படுவதை சொல்லி கேள்விப்பட்டு இருகிறன்.ஆண்களிடம் நிலம் வேண்டும் என்ற நிபந்தனையும் வரத்சனைதானே?.ஆண்கள் வரதட்சனை கேட்பதுபோலவே இது பெண்கள் கேட்கும் வரதட்சனைதானே.இது தவறு இல்லையா?அதுவும் குமரியில் நிலத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை.கற்றவர்கள் நிரம்பிய மாவட்டத்தில் ஆண்கலிடம் ம் வரதட்சனை கேட்க தொடங்கி இருப்பது சிந்திக்க வேண்டிய விடயமாகவே தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை: