பக்கங்கள்

செவ்வாய், 21 டிசம்பர், 2010

மரபு வழித்திருமணம்

நண்பர்களே  கொட்டும் மழையோடு மழையாக எனது திருமணமும் நிகழ்ந்தேறிவிட்டது.எளிய முறையில் மரபு வழித்திருமணம்.மதம்பார்த்து.சமூகம் பார்த்து நடந்த திருமணம்.புதுமை எதுவும் செய்யவில்லை.ஒருசில மரக்கன்றுகள் நட்டேன்.சென்னையில் இல்லற வாழ்க்கையை  தொடங்கிவிட்டேன்.திருமணத்தில் கடும் மழை.இயற்கையின் வாழ்த்த்தாக அதை கருதிக்கொண்டேன்.கடுமையான மழை பெயத்தால் நிறைய அரிசி தின்றிருக்கிராய் என்ற கேலி  உறவினர்களிடம் இருந்து .அரசி அதிகமாக தின்பவர்களின் திருமணத்தில் நல்ல மழை பெய்யும் என்பது ஊரில் நம்பிக்கை.எனக்கு இந்த விபரம் அன்றுதான் தெரியவந்தது.நம்பிக்கைகள் தானே வாழ்க்கைக்கு வண்ணம் ஆகிறது.அவள் அய்யாவழிக்குடும்பம்.எனினும் கிரிஸ்தவ ஈடுபாடு கொண்டவள்.நான் தமிழ் இந்து  நாத்திகன்.எனினும் சடங்குகள் செய்தே திருமணம் செய்துகொண்டேன்.

2 கருத்துகள்:

சமுத்ரா சொன்னது…

congrats!

துளசி கோபால் சொன்னது…

மண வாழ்க்கை இனிதே அமைய எங்கள் இதயம் கனிந்த இனிய வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.