தமிழர்க்கு தேவை
ஜெனீவா தீர்மானத்தில் இலங்கை அரசை கண்டிக்கும் வார்த்தைகள் கூட இல்லைதான்.தமிழர்களுக்கு அதில் நியாயமும் கிடைக்காதுதான்.தங்கள் சுயநலத்திற்காக இலங்கை அரசை தங்கள் கட்டுக்குள் கொண்டுவரும்நோக்க்ம் தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்பதும் நிஜம்தான்.
உலக அரசியல் ஈழம் என்ற சிட்டுக்குருவிகூட்டை சிதை த்துப்போட்டது.தாம் வாழ்ந்த கூடுகாக்க போராடிய சிட்டுக்குரூவிகளை பயங்கரவாதிகளாக
முத்திரை குத்தி சிதைத்தது.அனைத்தும் உண்மை .
எனினும், இன்றைய நிலையில் மகிந்தரை கண்டிக்ககூட இல்லை என்றபோதும் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானத்தின் வெற்றி தமிழர்க்கு தேவை.ராஜதந்திரத்தில் இது ஒரு சயொரு வெற்றியாக இருக்கும்.
ஆனால் நீண்டநாள் நோக்கில் போராடும் பிற தேசியயங்களோடு இணைந்து செயல் படுவதே ஈழத்தமிழர் எதிர்காலத்துக்கு ஏற்றது.விடுதலை என்பது போராட்டத்தில்தான் மலரும்.அன்னியநாடுகளின் நிழழில் இருந்து அதை ஒருபோதும்ம் பெற முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக