சனி, 21 ஜூலை, 2012
மௌனம்
காயத்தில் மிதந்த மௌனம்
மகத்துவம்மிக்கது,மௌனம். சொற்களின் ரகசியங்களே மௌனமே விளங்கச்செய்கிறது. சொற்களின் மதிப்பும் மௌனத்தில் இருந்தே மலர்கிறது. நிறைகளே மௌனத்தை தழுவி நிற்கிறது.‘நிறைகுடம் தழும்பாது’&எளியமொழி.மௌனத்தின்காயங்களாகவே மலர்கின்றன சிலரிடம் சொற்கள்.சிலருக்கு சொற்கள் அணிசேர்க்கிறது.இன்னும் சிலருக்கு மௌனம்!
தமிழறிஞர்ஓருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். மௌனத்தின் பெருமை குறித்து பேசினார்....பேசினார்...பேசிக்கொண்டே இருந்தார். ‘நண்பர்கள் நேரக்கள்வர்கள்’ என்கிறது ஜெர்மாணிய பொன்மொழி.தூரத்தில் ரசிக்க வைக்கின்றவர்கள் அருகில் வெறுக்க வைத்துவிடுகிறார்கள்.அந்த தமிழறிஞரும் அப்படியே...!என் நேரத்தை சித்ரவதை செய்து கொன்று புதைத்தார்.அவர்பேச்சை முடித்தபோது....மெல்ல மலர்ந்த மௌனம் குறித்து யோசித்தேன்.வெட்டுகாயமாய் கிடந்தது மௌனம்!!!.
சிலர் பேசுதல் பெருமை!சிலருக்கு சிறுமையே!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக