பக்கங்கள்

புதன், 18 ஜூலை, 2012


                       மரண தண்டனை

                      இந்தியாவில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் ஒன்று.மரண தண்டனை வேண்டுமா, வேண்டாமா என்பது. மரண தண்டனை ஒருபோதும் சட்டத்தில் இருக்கக் கூடாது என்று மரண தண்டனைக்கு எதிரானவர்களும்
மரண தண்டனை இல்லாவிட்ட்£ல் குற்றங்கள் அதிகரி&த்து நாடு சீரழிந்துவிடும், என்று மரண தண்டனை ஆதரவாளர்களும் வாத பிரதிவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.உலகில் உள்ள 138 நாடுகளில் மரண தண்டணை சட்டத்தில் இருந்து நீக்கிவிட்டனர். அமெரிக்காவில் மரணதண்டனை இருந்தாலும் பல மாகாணங்கள் மரணதண்டணையைதடை செய்துவிட்டன.
                              கொலை
         ‘ நீ இன்ன நாளில் இந்த நேரத்தில் கொல்லப்படுவாய்’என்று கூறி,மரண தண்டனை அளிப்பதது அப்பட்டமாக கொலைதான். கொடுமையான கொலை! நாகரீக சமூகத்தில் மரண தண்டனைகளே இருக்கக்கூடாது.அதுவும் அரசாங்கங்களே கொலை செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
                                  குற்றங்கள்
மரண தண்டனையை நீக்கிவிட்டால் குற்றங்கள் பெருகிவிடும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.ஆனால்,மரணதண்டணைஅமலில் உள்ள நாடுகளைக்காட்டிலும்,மரண தண்டனை இல்லாத நாடுகளில் குறைவாகத்தான் குற்றம் நடப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மரணதண்டணைக்கு எதிர்ப்பு என்பது ஓருவரை கொல்வதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதும்தான்.எல்லாவிதமான் கொலைகளுக்குமான எதிர்ப்பே மரணதண்டணைக்கான எதிர்ப்பாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: