பக்கங்கள்

செவ்வாய், 17 ஜூலை, 2012

                                                 வணக்கும் பெண்களே....
 பெண் புத்தி பின் புத்தி’ என்பது நம் பழமொழி!
இதற்கு இரண்டு விதமான வியாக்கினங்கள் உண்டு.பெண்ணை இழிவு செய்வதாக சொல்லும் ஓரு தரப்பும், பின்னால் வருவதை யோசித்து,  பெண்கள்   முன்னால் சொல்லுவதே குறிப்பிடத் தோன்றியதே  இந்தபழமொழி.காலப்போக்கில் பொருள் மாறி விட்டது’ என்று  இன்னொரு  தரப்பும்.
‘பொம்பள பேச்சை கேட்டால் உருப்பட்ட மாதிரிதான்’ என்பதான சாதாணமாக பேசிக் கடந்துவிடும் குரல்களும் மிகுதிதான். ஆணைக்காட்டிலும் பெண் புத்திசாலி தான் என்றோ, பெண்ணைக்காடடிலும் ஆண்தான் புததிசாலி என்றோ சொல்ல முடியாது.இரு பாலினர்க்கும் தனித்த கூறுகள் உண்டு.சில விஷயத்தில் பெண்களும், சிலவற்றில் ஆண்களும்!  அவரவர் வாழ்வு வாய்ப்பும் சூழலும் சேர்ந்து நிர்ணயிக்கும் விஷயம் இது.
அண்மையில் வெளியான ஆய்வு முடிவில் ஆண்களை காட்டிலும்  பெண்கள் நுண்ணறிவில் சிறந்து விளங்குவதாக தெரியவிந்துள்ளது.பெண்கள் தோளை நிமிர்த்திக்கொள்ளலாம்,நாங்கள்தான் உயர்த்தி என்று! வணக்கும் பெண்களே...!!!

கருத்துகள் இல்லை: