பக்கங்கள்

சனி, 14 ஜூலை, 2012

                       


 

                            மரிக்கும் மனசாட்சி

சொல்லுக்கும்,செயலுக்கும் தொடர்பில்லாமல் இரட்டை நிலையில் வாழும்தன்மை கொண்டது இந்திய மனம். உள்ளொன்றும் புறமொன்றும்!
நதிகள்,தெய்வங்கள்,நிலம் என பெண்களின் பெயர்களைத்தான் இந்தியாவில் சூட்டியிருக்கிறம்.நாங்கள் இந்தியாவில் பெண்களை தெய்வமாக போற்றுகிறோம் என்றெல்லாம் பேசுவதில் இந்தியர்கள் சமர்த்தானவர்கள்.
ஆனால், நடைமுறையில் சற்று சுயேச்சையாக செயல்படும் ‘நல்ல பெண்’என்ற இந்திய ஆண் மனம் வரையறைக்கு அப்பால் இயங்கும் பெண்களை ’அடங்காப்பிடாறிகளாக’'அடக்கப்படவேண்டியவர்களாக' கட்டமைப்பதில் ஆண் மனம் அலாதியாய் இயங்கும் இயல்புடையதாக இருக்கின்றது.
         பெண்உடல் மீது பெரும் அதிகாரம் செலுத்தவே விரும்பும் வகையில் மனம் மரபுவழியல் ஆண்இனம் கட்டமைக்கபட்டு உள்ளது.
பெண்ணை  சக உயிரியாக கருதும் மனநிலை இங்கு உருவாகவில்லை. அவள் ‘சாப்பிட பட வேண்டிய பாலியல் பண்டமாகவே  கருதப்படுகிறாள். கவர்ச்சியாக ஆடை அணிவதாலே பெண்கள் மீது பாலியல் சீண்டல்கள் நிகழ்வதாக கருதுகின்றவர்களே இங்கு அதிகம்..அதிகாரம் செலுத்த விரும்பும் நோக்கமே பாலியல் தாக்குதலுக்கு பின்னால் இருப்பதை நம்பிக்கைகள் ஏற்க மறுக்கின்றன. ஆண்தன்மை கொண்டவர்களும்,சுயேச்சையாக செயல்படும் இயல்புடைய பெண்கள்தான் அதிகளவில் பாலியல் தாக்குதலுக்கு  இலக்காகிறார்கள் என்று பல ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.
           அசாம், குவகாத்தியில் 17 வயது  இளம்பெண் 20 பேர் கொண்ட  மது அருந்திய கும்பலால்  ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்யப்பட்டுள்ளார். நண்ப«£ரடு பார் போய்விட்டு திரும்பும்போதே அந்தப்பபெண்ணுக்கு இந்தநிலை ஏற்பட்டுள்ளது!
17வயது இளம் பெண் பாருக்குள் அனுமதிக்கபடக்கூடாது, அனுமதித்து இருக்கிறார்கள். மது அருந்தினாலா   இல்லையா-?தெரியாது.அவள் பாதிக்கப்பட்டது உண்மை. அவளுக்கு நீதி கிடைக்க  வேண்டும்.
          30 நிமிடங்கள் போராடியும் யாரும் அவளுக்கு உதவி செய்யவில்லை.பலரும் கண்டும் கானாததுபோல் போய் இருக்கிறார்கள்.மனசாட்சிகள் அடகுவைக்கப்பட்டுவிட்டன!தட்டிக்கேட்கும் தைரியம் இல்லாதவர்களாக மாறி இருக்கிறது நடுத்தர வர்க்கம். அதன் பிரதிபலிப்புகளே தட்டிக்கேட்கும்
மனசாட்சியை பாதுகாப்பாக அடகுவைத்தல்!
பாரதியின் மொழியில் ‘பெட்டைகள்’!

காவல்துறை

 அசாம் காவல் துறை கூடுதல் இயக்குநர்ஓருவர்  “காவல்துறை ஏடிஎம் அல்ல” என்று  சர்வசாதரணமாக சொல்லி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் ஆந்திரபோலிஸ் அதிகாரி ஓருவரும் இதுபோல், கருத்து  தெரிவித்தார்.ஓரு மாநிலத் தலைநகர் அருகில் ஓரு பெண் பாதிக்கப்டுகிறாள்.அரசு தலைமையகம்,நீதிமன்றம் அருகில் இருக்கின்றன.ஆனால், அசாம் காவல் துறை அதிகாரி பொறுப்பில்லாமல் உளறிக்கொட்டி இருக்கார்.இவர்களின் பாதுகாப்பில்தான் நாம் இருக்கிறாறோம்-?!பயமாக இருக்கிறது.!இந்திய வம்சாவளி அமெரிக்க பெண்ணுக்கு முன்பு  ஆங்கில புத்தாண்டு தினத்தில்  மும்பை ஜீகு கடற்கை¬யில்  இரவில் நடந்ததை« நாம் அறிவோம்.
தங்கள் அரசியல் எஜமானர்களின் வீட்டு பெண்களுக்கு இப்படி நடத்திருந்தால் இதுபோல் கருத்து சொல்லும் தைரியம் வந்திருக்குமா-?சாமானியர்களுக்கு  நடக்கும் கொடுமைகள் சாமானியமாகவே போய்விடுகிறது கடமைமறவாத காவல்துறைக்கு.‘நடவடிக்கை எடு’ என்றால் ஏளனமாக பேசுகிறார்கள்.
ஊடகம்
பாலியல்  சீண்டல்  காட்சிகள் ஊடகங்களுக்கு பெரும் கொண்டாட்டமாகவே அமைந்துவிடுகின்றன.  பார்வையாளனை கிளுகிளுப்பில் ஆழ்த்தி   ‘ரேட்டிங்’ உயர்த்திக்கொள்ளும் வேகம் அவர்களிடம்.வேறென்ன சொல்ல!
பாலியல் சீண்டலில் ஈடுபடும்  ஓருவனுக்கும்  அதை காட்சியாக்க அப்படியே ஓளிபரப்பும் ஊடகத்திற்கும் பெரிய பெரியவித்தியாசம் கிடையாது. குற்றவாளி ஓருமுறை செய்வதை இவர்கள் பலமுறை செய்கிறார்கள்.பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்கம் இவர்களிடம் விற்பனைக்குரிய கடைச்சரக்காகி விடுகிறது.
அறம்
ஜெயலில்தாவுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் தர்மபுரியில் கால்நடைக்கல்லூரி மாணவிகள் பயணம் செய்த பேருந்து தீ வைத்து கொளுத்தப்பட்டது. மாணவிகள் கருகி சாம்பலானார்கள். அந்த கொடூரத்தை தடுக்க முயற்சிக்காமல் குற்றவுணர்ச்சியே இல்லாமல் ஓளிபரப்பி, ‘கருமமே உயிராகி’விட்டனர்.கவுகாத்தியிலும்  அரைமணி நேரம் அந்தப்பெண் மானபங்கம் படுத்தப்பட்டதை படம் பிடித்து காட்சியாக்கி  இருக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
     ஓருவர் பாதிக்கபடும் இடத்தில் இருப்பவர்கள் முதலில் மனிதர்களாக நடந்துகொள்ள வேண்டும். மனிதனாகவே இல்லாமல் ஊடகவியலாளனாக இருந்து இவர்கள் என்ன பயன்-?
கௌகாத்தி  நிகழ்வில் அது ஊடகத்தை சார்ந்தவராக இருந்தாலும்,  படம்பிடித்து ஊடகத்திற்கு
                                     தொலைக்காட்சிகள்
இரண்டு நாட்களாக தொலைக்காட்சிகள் மறுபடியும்  மறுபடியுமாக  ஓளிபரப்பிக் கொண்டு  இருக்கின்றன. சூடான விவாதங்களை  நடத்துகின்றன.பாதுகாப்பாக இருக்கும் வி.ஐ.பி.பெண்கள் கருத்துமழை பொழிகிறார்கள். ''கடமை''மறவாத காவல்துறைக்கு.‘நடவடிக்கை எடு’ என்றால் ஏளனமாக பேசுகிறார்கள்.
 பாலியல்  சீண்டல்  காட்சிகள் ஊடகங்களுக்கு பெரும் கொண்டாட்டமாகவே அமைகின்றன. பார்வையாளனை கிளுகிளுப்பில் ஆழ்த்தி   ‘ரேட்டிங்’ உயர்த்திக்கொள்ளும் வேகம் அவர்களிடம்.வேறென்ன சொல்ல!
பாலியல் சீண்டலில் ஈடுபடும்  ஓருவனுக்கும்  அதை காட்சியாக அப்படியே ஓளிபரப்பும் ஊடகத்திற்கும்  பெரியவித்தியாசம் கிடையாது. குற்றவாளி ஓருமுறை செய்வதை இவர்கள் பலமுறை செய்கிறார்கள்.பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்கம் இவர்களிடம் விற்பனைக்குரிய கடைச்சரக்காகி விடுகிறது. ஓருவர் பாதிக்கபடும் இடத்தில் இருப்பவர்கள் முதலில் மனிதர்களாக நடந்துகொள்ள வேண்டும்.
மனிதனாகவே இல்லாமல் ஊடகவியலாளனாக இருந்து இவர்கள் என்ன ப   யன்-?
கௌகாத்தில் நிகழ்வில் அது ஊடகத்தை சார்ந்தவராக இருந்தாலும்,  படம்பிடித்து ஊடகத்திற்கு  காட்சி¬  படம் பிடித்து விற்றவரும் குற்றவாளியே!பொறுப்பற்ற காவல்துறை அதிகாரிகளும்  தொடர்புடையவர்கல்தான்!!!

கருத்துகள் இல்லை: