வீடு
நண்பருகாக வாடகைக்கு வீடு தேடினோம். உச்சிவெயில் மண்டையை பிளக்க பல வீடுகள் ஏறி இறங்கியும் அமையவில்லை. தசரதபுரத்தை ஒட்டியுள்ள மஜிப் நகரின் ஒரு தெருவுக்குள் ''வாடகை வீடு ''அறிவிப்பு அந்த வீட்டின் கதவை தட்டினோம்.நண்பர் எப்போதும் சந்தன போட்டு வைக்கும் வழக்கம் உடையவர். நேற்றும் அப்படித்தான்.நெற்றியில் சந்தனப்பொட்டு வெயிலில் ஜொலித்தது வேர்வைத்துளிகளினுடே.கதவைத் திறந்தவர்..'' நாங்க இந்துக்களுக்கு வீடு கொடுக்கமாட்டோம்..எங்களுக்கு ஒழுக்கமாக இருக்கணும்..''என்று மறுத்துவிட்டார். 'சகோதர'த்துவத்தின் உச்சி மோந்து, வாழ்க நின் சமத்துவம் என்று அடுத்தா தெருவுக்குள் நுழைந்தோம்.தொதுபடுவதுபோல் இருந்த வீட்டில் பேசினால் நாங்க ஆசாரமானவங்க....பிராமின்ஸுக்கு மட்டும்தான் கொடுப்போம். ஸாரி. தப்பா நினைச்சுக்காதீங்கோ ''.மதங்களின் நீதியும் சமத்துவமும் வாழ்வுக்கு வாராது/
ஒன்றில் சாதி எனில் அதிலும் உட்கிடை மதமே இன்னொன்றில் நேரடியாக மதம்.
எமக்கு வீடு தேடிய ஒரு மங்கள் மாலையில் ஒரு வீட்டில் '' நீங்க கிறிஸ்டீனா? ''என்ற கேள்வி?... மனைவி குங்குமம் வைத்துக்கொள்ளாததால்!
என்னதான் கரடியாக கத்தினாலும் குழுவிய மனநிலையில் இருந்து மனிதன் மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்! பயத்தில் இருந்தே இவ்வாறானா சுய அடையாளத்தை ஒத்தவர்களை மனம் விரும்புகிறது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக