பக்கங்கள்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

''அழகாய் இருக்கிறாய் பயமாயிருக்கிறது'' படத்தின் இயக்குனருடன் நேர்காணலில் இருந்தேன் திடீரென்று அந்த அறைக்குள் பிரவேசித்தான் தயாரிப்பாளர் சேரன். அந்த இயக்குனர் நான் எந்த ஊடகத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று சேரனிடம் கூறினார்.
நான் பணியாற்றிய நிறுவனத்திற்கும் அவருக்கும் அப்போது மோதல் இருந்தது.
உணர்ச்சி பிரவாகத்துடன் இருந்த சேரன் நேர்காணலை தடுத்து நிறுத்திவிட்டார்.அந்த இயக்குனர் செய்வதறியாது நின்றார். கலைஞர்கள் உணர்ச்சிகர மானவர்கள்தான்.ஆனால் அந்த இயக்குனரும் கலைஞன் தானே.அவருக்கு என்று கருத்தில்லையா?கொஞ்சநாளில் அந்த ஊடகத்துடன் 'ராசி'யாகிவிட்டார்.ஒருவேளை அவரது அப்போதைய காயத்தை காலம் ஆற்றியிருக்கலாம். மற்றவர்கள்?

கருத்துகள் இல்லை: