பக்கங்கள்

சனி, 28 ஏப்ரல், 2012

மாவோவியர் சிந்திக்க...

அரசியல் பேரங்களுக்காக ஆட்களை-அதிகாரவர்க்கத்தினராக இருப்பினும் கடத்துவது தவறான போராட்ட வழிமுறையாக வரலாறு பதிவு செய்யும்!கடத்தலில் எந்த அரசியலும் இல்லை!அரசுகள் அதை செய்வதாலே அதற்கு எதிராநதாக இருக்கும் அமைப்புகள் செய்வதாக கூருவதை ஏற்க முடியாது.கடத்தல் என்பது முற்றுமுழுதான கடத்தலே!இதில் அரசியல் தந்திரங்கள் ஏதும் கிடையாது.மானுடத்தின் மீதான-அதன் சுதந்திரத்தின் மீதான மாபெரும் தாக்குதலே ஆள் கடத்தல்!!! அலெக்ஸ் பால் மேனனை விடுவித்தாலே நீதியானது!மாவோவியர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்!

புதன், 25 ஏப்ரல், 2012

வாழ்வின் நிமித்தமாய்...
சொல்வதற்கு
 ஒன்றுமில்லாது போனது
 இருள்வெளியில்...
  தனித்த பொழுதில் நமக்குள்
  அந்தரத்தில் அர்த்தமற்று
  திரிந்தது
  மௌனத்தில் பிரசவித்த சொற்கள்
  சொற்களின் குவியலில்
  அர்த்தங்கலும்  அடையாலமும் 
 தொலைந்தன நமக்குள்...
  நம் நட்பின் அடர்த்தியில்
  தீப்பற்றி எரிந்தது பெரும்காடாய்...
  கதைகளை சுமந்தபடி
  திரியும் வாழ்வு நமக்கு
   உன் கதையை நானும்
   என் நிகழ்வை நீயும்
   கதை சுமக்கும் வாழ்வு
 எப்போதோ நாம் தொலைத்த சொற்கள்
  இன்னும் கிடைக்கவில்லை...
  ஒரு மரணத்தில்
   புதைக்கப்பட்டு இருக்கலாம்.
    யாரும் வாழ்வதில்லை யாருடையவாழ்வையும்
   நாமும் வாழ்கிறோம் 
  அவரவர் வாழ்வை..
.வாழ்வின் நிமித்தமாய்

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

 நிலா...
தைகள் முளைத்த
 நிலாமுற்றம்
 காய்ந்து கிடக்க...
 கதைத்த கிழவிகள்
 காட்சிப்பெட்டிக்குள்
  புதைந்து கிடக்கிறார்கள்
  தனியாய் முளைக்கிறது
   பிறைநிலா

 

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

யாவருக்கும்
யாரும் இல்லை
 யாருக்கும்
 யாரும் இல்லை
 யாரோடும்
 யாவரும்  சிரிக்கிறோம்.
 கைகுலுக்குகிறோம்
 கதைகள் பகிர்கிறோம்
 கனவுகள் பகிர்கிறோம்
 கடந்து போகிறோம்      
 யாரும் இல்லையாருக்கும்

திங்கள், 26 மார்ச், 2012

ஊடகம்

                               

அதிகாரத்திற்கு எதிராக அறத்தின்  சார்பில் நிற்க வேண்ட்டிய  ஊடகங்கள்.அதிகாரத்தால் உருவாக்கட்ட அறத்தின் முன் கூழைக்கும்பிடு போடுவதாக ஆகியுள்ளன.  குரூகல்  நோக்கத்துடன் இயங்குகின்றன. ஊடங்களிடம் இருந்து விடுபடுதலை காட்டிலும் ஊடகமாகசெயப்படும் வாய்ப்பை நவீன நுட்பம் அனைவருக்கும் கொடுத்துள்ளது. அதை யன்படுத்திக்கொள்வதே ஊடங்களை முறைபடுத்தும் வழியாகும்
          செய்திகளுக்கு பின்னால் இயங்கும் அரசியல் நுட்பமானது.தமிழ்ச்சூழலில் வெளிப்படையானது.மொழிகளை சொற்களை உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் நிலையிலே அரசியல் துவங்குகிறது.செய்தியை ஒரு உற்பத்தி பொருளாக ஊடகங்கள் விற்கின்றன.மக்களின் அரசியலை கட்டமைப்பதில் மீடியாவின் அரசியல் முக்கியமானது.மக்களிடம் இருந்தே அன்னியப்பட்டு நிற்கும் ஊடகங்களிடம் உண்மையும் பிணமாகவே கிடக்கும்.

புதன், 21 மார்ச், 2012

மூர்க்கம் ஏன்

நாட்டின் ஒரு  பகுதிக்குள் மின்சாரத்தை நிறுத்தி மக்களை இருட்டுக்குள் தள்ளிவிடுவது கொடுரம்.ஜனநாயக வழியில்போராடுகின்றவர்கள் மீது இந்த மூர்க்கம் எதற்காக.உயிர் வாழ்க்கைக்கு அவசியமான குடிநிரை துண்டிக்க தேவை என்ன?குழந்தைகள்,பெண்கள் மீது இந்த நடவடிக்கை எதற்காக.அவர்கள் என்ன குற்றம் இழைத்தனர்.அரசு வளத்தை கொள்ளையடித்தார்கள?
      ஆட்சியில் இருப்பவர்களைபோல.நாட்டை விற்றார்கள?உயிர்ப்பலியை நிகழ்த்தினார்களா?காந்தியத்தின் அடிப்படையில்தானே போராடினார்கள்?போராடுகிறர்கள்.மக்களின் அச்சத்தை போக்கியதாக சொன்னார்களே?அது உண்மையானால் இத்தனை ஆயிரம் மக்கள் அந்தச்சின்ன கிராமத்தில் போராடுகிர்ரர்களே?எப்படி.பொய்  சொல்வது யார்?அன்னியத்தரகர்கள் யார்?
              அறிவுக்கு புறம்பாக கிளிப்பில்லையைபோல் அபாயம் இல்லை என்று சொல்லும் மூடர்கள் யார்?அந்நிய நாடுகலோடான ஒப்பந்தத்தை நிறைவேற்ற சொந்த மக்களின் வாழ்வை பழியிட வேண்டிய தேவை என்ன?

செவ்வாய், 20 மார்ச், 2012

                                  கல்லறை பூமி
           இந்திய-தமிழக அரசுகள் இடிந்தகரை மக்கள் மீது கிட்டத்தட்ட ஒரு மறைமுக யுத்தம் நடத்துகிறது.மின்சாரம்,குடிநீர்,உணவு எனதடைவித்தித்து போராடும் மக்களை பட்டினிபோட்டுள்ளது.இதுதான் ஜனநாயகமா?ஆதிகாரத்தில் இருக்கும் அன்னியநாடுகளின் தரகர்கள் சொல்லுவதை கேள்வியே இல்லாமல் மக்கள் ஈர்க்க வேண்டும் என்றால் இது ஜனநாயக நாடுதான?
உலகமே கைவிட்ட்டுவரும் ஒரூ நுட்பத்தை பயன்படுத்துவதை கைவிட்டுவிட்டு மாற்றுவழியில் மின்சாரம் தயாரிப்பதுதானே நியாயம்.எவனோ வாங்கிய கமிஷன் பனத்துக்காக தமிழக மக்கள் அழியத்தான் வேண்டுமா?ஜப்பான்,சுவிடன்.ஜெர்மனி என பல நாப்=துகள் மார்ருவழு குறித்துதானே இபோது யோசிக்கிறது. இந்திய ஆட்சியாளர்கள் இந்தியாவை கல்லறை பூமியாக்கவே ஆக்கவே  செயல்படுகிரார்கள்.
 மேற்கு வங்கம் மறுக்கிறது.கேரளம் துரத்துகிறது..ஆனால் தமிழகத்தில் மட்டும் எதிர்க்கும் மக்களை சக தமிழர்களை இழிவுபடுத்துகிர்ரர்கள்.//விதியே விதியே என் செய் நினைத்தாய் என் தமிழ்ச்சாதியை! பாரதியின் குரல் மிதக்கிறது மன வெளியில்.