பக்கங்கள்

புதன், 21 மார்ச், 2012

மூர்க்கம் ஏன்

நாட்டின் ஒரு  பகுதிக்குள் மின்சாரத்தை நிறுத்தி மக்களை இருட்டுக்குள் தள்ளிவிடுவது கொடுரம்.ஜனநாயக வழியில்போராடுகின்றவர்கள் மீது இந்த மூர்க்கம் எதற்காக.உயிர் வாழ்க்கைக்கு அவசியமான குடிநிரை துண்டிக்க தேவை என்ன?குழந்தைகள்,பெண்கள் மீது இந்த நடவடிக்கை எதற்காக.அவர்கள் என்ன குற்றம் இழைத்தனர்.அரசு வளத்தை கொள்ளையடித்தார்கள?
      ஆட்சியில் இருப்பவர்களைபோல.நாட்டை விற்றார்கள?உயிர்ப்பலியை நிகழ்த்தினார்களா?காந்தியத்தின் அடிப்படையில்தானே போராடினார்கள்?போராடுகிறர்கள்.மக்களின் அச்சத்தை போக்கியதாக சொன்னார்களே?அது உண்மையானால் இத்தனை ஆயிரம் மக்கள் அந்தச்சின்ன கிராமத்தில் போராடுகிர்ரர்களே?எப்படி.பொய்  சொல்வது யார்?அன்னியத்தரகர்கள் யார்?
              அறிவுக்கு புறம்பாக கிளிப்பில்லையைபோல் அபாயம் இல்லை என்று சொல்லும் மூடர்கள் யார்?அந்நிய நாடுகலோடான ஒப்பந்தத்தை நிறைவேற்ற சொந்த மக்களின் வாழ்வை பழியிட வேண்டிய தேவை என்ன?

செவ்வாய், 20 மார்ச், 2012

                                  கல்லறை பூமி
           இந்திய-தமிழக அரசுகள் இடிந்தகரை மக்கள் மீது கிட்டத்தட்ட ஒரு மறைமுக யுத்தம் நடத்துகிறது.மின்சாரம்,குடிநீர்,உணவு எனதடைவித்தித்து போராடும் மக்களை பட்டினிபோட்டுள்ளது.இதுதான் ஜனநாயகமா?ஆதிகாரத்தில் இருக்கும் அன்னியநாடுகளின் தரகர்கள் சொல்லுவதை கேள்வியே இல்லாமல் மக்கள் ஈர்க்க வேண்டும் என்றால் இது ஜனநாயக நாடுதான?
உலகமே கைவிட்ட்டுவரும் ஒரூ நுட்பத்தை பயன்படுத்துவதை கைவிட்டுவிட்டு மாற்றுவழியில் மின்சாரம் தயாரிப்பதுதானே நியாயம்.எவனோ வாங்கிய கமிஷன் பனத்துக்காக தமிழக மக்கள் அழியத்தான் வேண்டுமா?ஜப்பான்,சுவிடன்.ஜெர்மனி என பல நாப்=துகள் மார்ருவழு குறித்துதானே இபோது யோசிக்கிறது. இந்திய ஆட்சியாளர்கள் இந்தியாவை கல்லறை பூமியாக்கவே ஆக்கவே  செயல்படுகிரார்கள்.
 மேற்கு வங்கம் மறுக்கிறது.கேரளம் துரத்துகிறது..ஆனால் தமிழகத்தில் மட்டும் எதிர்க்கும் மக்களை சக தமிழர்களை இழிவுபடுத்துகிர்ரர்கள்.//விதியே விதியே என் செய் நினைத்தாய் என் தமிழ்ச்சாதியை! பாரதியின் குரல் மிதக்கிறது மன வெளியில். 

திங்கள், 19 மார்ச், 2012

     

                                       நேச சக்தி                    ஈழத்தமிழர்க்கு எந்த வகையிலும் ஐ.நா.மனித உரிமை  அமர்வில்          அமேரிக்காவின் தீர்மானம் நியாயம் சேர்க்காது. போர்க்குற்றம். இனப்படுகொலைஇல் l இருந்து மகிந்திராவை காப்பாற்றவும் நோக்கமே தீர்மானத்திற்குள் ஒளிந்துள்ளது.வல்லரசு நாடுகளின் பொருளாதார புவிசார் நலன்களின் ஆட்டமும் இந்த தீர்மானத்தில் பதுங்கி இருக்கிறது. தமிழருக்கு பயன் இல்லை.எனினும், முதல்முறையாக உலகளவில் முக்கியமான  ஒரு அமர்வில் தமிழர் பிரச்சினை தொடர்பாக தீர்மானம் இயற்றப்படுவது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
          தீர்மானத்தை படித்துவிட்டு  ஆதரிப்பதாக இந்திய பிரதமர் சொல்லி இருக்கார். இருநாளுக்கு முன் வெளியான  ராஜபக்ஷேயின் அறிக்கையில் //எந்த நாட்டையும் நம்பவில்லை// என்ற தொனியில் சில வாக்கியங்கள் இருந்தன. இந்தியாவின் முடிவு குறித்து இந்திய மக்களுக்கு முன்பாகவே அவருக்கு கூறப்பட்டுள்ளது தெளிவானது.
     இனபடுகொலை,போர்க்குற்றம், தாயககோட்பாடு  தொடர்பான ஈழத் தமிழர் அரசியல் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தல் முக்கியமானது.உலகத் தமிழரும் மானிடத்தை நேசிப்பவர்களும் அவர்களுக்கு பக்கத்துணையாக மட்டுமே வினையாற்ற  முடியும்,வேண்டும். ஈழத்தமிழரை தங்கள் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும். சிங்கள சக்திகளோ, இந்தியாவோ, தமிழக தமிழர்கலோ கிடையாது. .உழகத்தமிழர்கள் ஈழத்தமிழர்த்களின் நேச சக்தியாக மட்டுமே செயல்பட வேண்டும்.

                           வேடம்
கூடங்குளம் அணுஉலை திறப்பு விஷயத்தில் ஜெயலலிதா தன் இயல்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  இடைதேர்தலுக்காக காத்திருந்திருந்தவர் வேடம் கலைத்துள்ளார். இடைத்தேர்தல் முடிந்த மறுநாளிலேயே  உடனடியாக அணுஉலையை திறக்க  அமைச்சரவை தீர்மானம் இயற்றிஇருக்கிறார்.மிகவும் பாதுகாப்பானதுதானாம்.இந்த விஷயத்தில் ஜெயலலிதாவை அந்தப்பகுதி மக்கள் ஒருபோதும் நம்பியதுமில்லை. அணுஉலகை திறந்தால் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கும் என்று  எதனடிப்படையில் கூறுகிறார்கள் என்பதும் புரியவில்லை.  அமைதியாக போராடிய மக்கள் மீது எத்தனை வழக்குகள்,பழிகள்,அன்னியகூலிகள், தேசத்துரோகிகள்  சாட்டுகள். இந்த நாட்டில் உண்மையான அன்னியகூலிகளாக இருப்பது யார்?அதிகாரத்தில் இருப்பவர்கள்!வாழ்க.!இந்திய-தமிழக தலைவர்களின் உலைவெறி!.

சனி, 17 மார்ச், 2012

  


                                                           உலகத்தமிழர் வங்கி
அரசியல் களத்தில் செயப்டும் உலகத்- ஈழத் தமிழர்கள்  வலிமையான பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.இன்றைக்கு உலக அரசியலைபொருளாதார ''கொள்ளைகளே'' வழுநடத்துகின்றது   என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
                   புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மூதலிடு செய்வதற்கு ஒரு குவிமையம் தேவை.அதற்கான வங்கிகட்டமைப்புகளை உ ருவாக்கல் அவசியம்.இலங்கை அரசின் ஆண்டு வருவாயை விடபுலத்தில் வாழும் தமிழர்களின் ஆண்டுவருவாய் அதிகம்.ஆனால் தமிழருக்கான வருவாய் தமிழருக்காக இல்லாமல் பிற நாடுகளின் நிருவனங்களுக்கே அதிகமாக செல்கிறது.அதை தடுப்பதோடு மாட்டை மாற்றி விட வேண்டும்.
                   உலகத்தமிழருக்கான ஒரு வங்கியை உருவாக்குவதோடு  உலகின் எப்பகுதியில் வாழும் தமிழரின் பொருளாதாரம் மற்றும்  தொழில் ஆக்கத்திற்கும் உதவும் வகையில் அதை அமைத்துக்கொள்ள வேண்டும்.நாடு கடந்த நிலையில்செயபடுவது முக்கியம். இஸ்லாமிய வங்கி முறைபோல், தமிழருக்கே உரித்தான தனித்த அடையாளங்களுடன் ஜனநாயக விழுமியங்களுடன் இயங்கவேண்டும்.




வெள்ளி, 16 மார்ச், 2012



   அச்சமூட்டுகிறது
   இத்தனை கோரக்கொலைகள் நம் அருகில். ஓங்கி கத்தினால் கேட்கும் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு நாட்டில் நடந்தும் நம் மனசாட்சிகள் இருளில் புதைந்து கிடந்ததை    நினைக்கும் நேரமெல்லாம்   வெட்கம் பிடுங்கித் தின்னுகிறது.
   போர் என்பதே நியாயப்படுத்த முடியாதுதான்.எந்தப்போரும் நியாமில்லைதான்.என்றாலும் பாதிக்கப்பட்டவன் இயலாமையின் வலியுடன் ஆயுதம் தூக்கினால் அதை குறைந்த பட்ச நியாயம்பாராமல் உலகம் சண்டித்தனம் செய்து அழித்தது. யுத்த தர்மங்கள் இலங்கையில் செத்துப்போயின.புத்தனின் பெயரால் துவங்கிய வெறியுட்டல் விஷ குண்டுகளால் முடித்துவைக்கப்பட்ட்ன.புத்தனுக்கு ரத்தாபிஷேகம்.தமிழர் ரத்தத்தால்.
      விஷ குண்டுகளை வீசி கொத்து கொத்துதாக பிணங்களை விழச்செயதும் உடல்களை உருகச்செயதும் நிகழும் மரணத்தை அறியாமலே முடிந்து போவதுமானான ஒரு பெரும் மனிதக்கொலைகளே  நடந்திருக்கிறது.அருகில் //காந்திய//அகிம்சை தேசம்.,வஞ்சகமாக கள்ள மௌனம் சாதித்து வேஷம் போட்டது.
               .பாராளுமன்றத்தில் பொய்களை கூவினார்கள்.உலகிற்கு பொய்யை விற்றுக்கொண்டிருன்தனர். தமிழ்நாட்டில் வேர்ருகோஷமும் பல்வேறு கொஷ்டியுமாக அரசியல் பண்ணினார்கள்.தாவரங்களுக்கும் பிற உயிரகளுக்கும் கூடகுரல்கொதுப்பவர்களும் மனிதர்களுக்காக பேசாமல் பிணங்களாய் கிடந்தனர்.பேசியவர்களில் பலரும் அரசியலுக்காக பேசினார்கள்.இந்தகாலத்தில் வாழ்ந்தவன் என்ற முறையில் ஒரு மிகப்பெரும் கொடுமையை கண்டும் காணாமலும் வாழ்ந்ததற்காக வெட்கப்படுகிறேன்.
                இத்தனை துயரங்களுக்கு பின்னும் தமிழ்நாட்டைதவிர இந்தியாவின்     எந்த மாநிலத்திலும் இது குறித்து யாரும் பேசவில்லை என்பதுதான் அச்சமூட்டுகிறது.
 






வியாழன், 15 மார்ச், 2012

   
 





                                      தீராமல்
                       சொல்ல இருக்கிறது
                        கதைகள் 
                           சொல்ல இருக்கிறது
                          கண்ணீர்
                      சொல்ல  இருக்கிறது
                       வருத்தங்கள்
                    சொல்ல  இருக்கிறது
                    வேதனைகள்
                    சொல்ல இருக்கிறது
                    நினைவுகள்
               சொல்ல இருக்கிறது
                 வெட்கங்கள்
             சொல்ல இருக்கிறது
                 குற்றங்கள்
               சொல்லஇருக்கிறது
              இன்னும் நிறைய