பக்கங்கள்

திங்கள், 19 மார்ச், 2012

     

                                       நேச சக்தி                    ஈழத்தமிழர்க்கு எந்த வகையிலும் ஐ.நா.மனித உரிமை  அமர்வில்          அமேரிக்காவின் தீர்மானம் நியாயம் சேர்க்காது. போர்க்குற்றம். இனப்படுகொலைஇல் l இருந்து மகிந்திராவை காப்பாற்றவும் நோக்கமே தீர்மானத்திற்குள் ஒளிந்துள்ளது.வல்லரசு நாடுகளின் பொருளாதார புவிசார் நலன்களின் ஆட்டமும் இந்த தீர்மானத்தில் பதுங்கி இருக்கிறது. தமிழருக்கு பயன் இல்லை.எனினும், முதல்முறையாக உலகளவில் முக்கியமான  ஒரு அமர்வில் தமிழர் பிரச்சினை தொடர்பாக தீர்மானம் இயற்றப்படுவது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
          தீர்மானத்தை படித்துவிட்டு  ஆதரிப்பதாக இந்திய பிரதமர் சொல்லி இருக்கார். இருநாளுக்கு முன் வெளியான  ராஜபக்ஷேயின் அறிக்கையில் //எந்த நாட்டையும் நம்பவில்லை// என்ற தொனியில் சில வாக்கியங்கள் இருந்தன. இந்தியாவின் முடிவு குறித்து இந்திய மக்களுக்கு முன்பாகவே அவருக்கு கூறப்பட்டுள்ளது தெளிவானது.
     இனபடுகொலை,போர்க்குற்றம், தாயககோட்பாடு  தொடர்பான ஈழத் தமிழர் அரசியல் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தல் முக்கியமானது.உலகத் தமிழரும் மானிடத்தை நேசிப்பவர்களும் அவர்களுக்கு பக்கத்துணையாக மட்டுமே வினையாற்ற  முடியும்,வேண்டும். ஈழத்தமிழரை தங்கள் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும். சிங்கள சக்திகளோ, இந்தியாவோ, தமிழக தமிழர்கலோ கிடையாது. .உழகத்தமிழர்கள் ஈழத்தமிழர்த்களின் நேச சக்தியாக மட்டுமே செயல்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை: