பக்கங்கள்

திங்கள், 19 மார்ச், 2012

                           வேடம்
கூடங்குளம் அணுஉலை திறப்பு விஷயத்தில் ஜெயலலிதா தன் இயல்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  இடைதேர்தலுக்காக காத்திருந்திருந்தவர் வேடம் கலைத்துள்ளார். இடைத்தேர்தல் முடிந்த மறுநாளிலேயே  உடனடியாக அணுஉலையை திறக்க  அமைச்சரவை தீர்மானம் இயற்றிஇருக்கிறார்.மிகவும் பாதுகாப்பானதுதானாம்.இந்த விஷயத்தில் ஜெயலலிதாவை அந்தப்பகுதி மக்கள் ஒருபோதும் நம்பியதுமில்லை. அணுஉலகை திறந்தால் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கும் என்று  எதனடிப்படையில் கூறுகிறார்கள் என்பதும் புரியவில்லை.  அமைதியாக போராடிய மக்கள் மீது எத்தனை வழக்குகள்,பழிகள்,அன்னியகூலிகள், தேசத்துரோகிகள்  சாட்டுகள். இந்த நாட்டில் உண்மையான அன்னியகூலிகளாக இருப்பது யார்?அதிகாரத்தில் இருப்பவர்கள்!வாழ்க.!இந்திய-தமிழக தலைவர்களின் உலைவெறி!.

கருத்துகள் இல்லை: