பக்கங்கள்

வெள்ளி, 16 மார்ச், 2012



   அச்சமூட்டுகிறது
   இத்தனை கோரக்கொலைகள் நம் அருகில். ஓங்கி கத்தினால் கேட்கும் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு நாட்டில் நடந்தும் நம் மனசாட்சிகள் இருளில் புதைந்து கிடந்ததை    நினைக்கும் நேரமெல்லாம்   வெட்கம் பிடுங்கித் தின்னுகிறது.
   போர் என்பதே நியாயப்படுத்த முடியாதுதான்.எந்தப்போரும் நியாமில்லைதான்.என்றாலும் பாதிக்கப்பட்டவன் இயலாமையின் வலியுடன் ஆயுதம் தூக்கினால் அதை குறைந்த பட்ச நியாயம்பாராமல் உலகம் சண்டித்தனம் செய்து அழித்தது. யுத்த தர்மங்கள் இலங்கையில் செத்துப்போயின.புத்தனின் பெயரால் துவங்கிய வெறியுட்டல் விஷ குண்டுகளால் முடித்துவைக்கப்பட்ட்ன.புத்தனுக்கு ரத்தாபிஷேகம்.தமிழர் ரத்தத்தால்.
      விஷ குண்டுகளை வீசி கொத்து கொத்துதாக பிணங்களை விழச்செயதும் உடல்களை உருகச்செயதும் நிகழும் மரணத்தை அறியாமலே முடிந்து போவதுமானான ஒரு பெரும் மனிதக்கொலைகளே  நடந்திருக்கிறது.அருகில் //காந்திய//அகிம்சை தேசம்.,வஞ்சகமாக கள்ள மௌனம் சாதித்து வேஷம் போட்டது.
               .பாராளுமன்றத்தில் பொய்களை கூவினார்கள்.உலகிற்கு பொய்யை விற்றுக்கொண்டிருன்தனர். தமிழ்நாட்டில் வேர்ருகோஷமும் பல்வேறு கொஷ்டியுமாக அரசியல் பண்ணினார்கள்.தாவரங்களுக்கும் பிற உயிரகளுக்கும் கூடகுரல்கொதுப்பவர்களும் மனிதர்களுக்காக பேசாமல் பிணங்களாய் கிடந்தனர்.பேசியவர்களில் பலரும் அரசியலுக்காக பேசினார்கள்.இந்தகாலத்தில் வாழ்ந்தவன் என்ற முறையில் ஒரு மிகப்பெரும் கொடுமையை கண்டும் காணாமலும் வாழ்ந்ததற்காக வெட்கப்படுகிறேன்.
                இத்தனை துயரங்களுக்கு பின்னும் தமிழ்நாட்டைதவிர இந்தியாவின்     எந்த மாநிலத்திலும் இது குறித்து யாரும் பேசவில்லை என்பதுதான் அச்சமூட்டுகிறது.
 






கருத்துகள் இல்லை: