வீடு
நண்பருகாக
வாடகைக்கு வீடு தேடினோம். உச்சிவெயில் மண்டையை பிளக்க பல வீடுகள் ஏறி
இறங்கியும் அமையவில்லை. தசரதபுரத்தை ஒட்டியுள்ள மஜிப் நகரின் ஒரு
தெருவுக்குள் ''வாடகை வீடு ''அறிவிப்பு அந்த வீட்டின் கதவை
தட்டினோம்.நண்பர் எப்போதும் சந்தன போட்டு வைக்கும் வழக்கம் உடையவர்.
நேற்றும் அப்படித்தான்.நெற்றியில் சந்தனப்பொட்டு வெயிலில் ஜொலித்தது வேர்வைத்துளிகளினுடே.கதவைத் திறந்தவர்.
.'' நாங்க இந்துக்களுக்கு
வீடு கொடுக்கமாட்டோம்..எங்களுக்கு ஒழுக்கமாக இருக்கணும்..''என்று
மறுத்துவிட்டார். 'சகோதர'த்துவத்தின் உச்சி மோந்து, வாழ்க நின் சமத்துவம்
என்று அடுத்தா தெருவுக்குள் நுழைந்தோம்.தொதுபடுவதுபோல் இருந்த வீட்டில்
பேசினால் நாங்க ஆசாரமானவங்க....பிராமின்ஸுக்கு மட்டும்தான் கொடுப்போம்.
ஸாரி. தப்பா நினைச்சுக்காதீங்கோ ''.மதங்களின் நீதியும் சமத்துவமும்
வாழ்வுக்கு வாராது/
ஒன்றில் சாதி எனில் அதிலும் உட்கிடை மதமே இன்னொன்றில் நேரடியாக மதம்.
எமக்கு வீடு தேடிய ஒரு மங்கள் மாலையில் ஒரு வீட்டில் '' நீங்க கிறிஸ்டீனா? ''என்ற கேள்வி?... மனைவி குங்குமம் வைத்துக்கொள்ளாததால்!
என்னதான் கரடியாக கத்தினாலும் குழுவிய மனநிலையில் இருந்து மனிதன்
மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்! பயத்தில் இருந்தே இவ்வாறானா சுய
அடையாளத்தை ஒத்தவர்களை மனம் விரும்புகிறது....
அரசு
அரசுகளின்
வரலாறுக்கும் மனிதனின் இருப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது!
மனிதனின் எழுச்சியோடு எழுந்தது அரசு! ஒரு கட்டத்தில் மனிதனை
கட்டுப்படுத்தும் பாத்திரத்தை கைக்கொண்டுள்ளது.மனிதர்களை கட்டுப்படுத்த
விரும்புகின்றவர்கள் அரசுகளை கட்டுப்படுத்த வேண்டும். அரசு என்ற
கருத்தாக்கம் இல்லாமல் வாழும் ஆதிக்குழுக்கள் பொதுமை பண்புகளை
கொண்டியங்கும். அரசு ஒரு மிகப்பெரிய சொத்துடமை இயந்திரமாக
இயங்குகிறது. இதனால், சொத்துடைமை ஒருபோதும் அழிக்க இயலாது. அரசு இயங்கும்
வரையில் சொத்துடமை இருக்கும்.ஒருவகையில் சொத்துடமையில் இருந்தே எழுந்தன
அரசுகள். காலப்போக்கில் அரசுகளே சொத்துடமை எந்திரங்க்களாகிப்போயின!
எந்த
வாழ்வு களிப்பை தருகிறதோ அதே வாழ்வு ஒருநாள் கண்ணீரையும் அளிக்கிறது. எந்த
வாழ்வு துக்கத்தை தருவதாக இருக்கிறதோ அதுவே கொண்டாட்டத்தையும்
பரிசளிக்கிறது. எந்த வாழ்வுக்காக ஜனித்திருக்கிறோமோ அதற்காகவே மரணிக்கவும்
செய்கிறோம்! வாழ்வின் தீராத புதிரும் வசீகரமும் இதுதான்
இறந்தவீடுகளிலும்
மேனரீசங்களுடன் நிற்கும் பிரபலங்கள் பரிதாபத்திற்குரியவர்கள். நிம்மதியாக
அழகூடமுடியாதவர்கள். அவர்களை துரத்தி,துரத்தி படம்பிடிக்கும் நிழல்/
ஒளிப்படக்காரர்கள் வேட்டையாடிகளாகவே தோன்றுகிறது.
ஒரு மரணவீட்டில்
நின்றுகொண்டிருந்தபோது நடிகர் அஜீத் வந்தார், பெரிய பாசாங்குகள் இல்லை.
வந்த ரசிகர்ஆர்வத்தோடு கைகுழுக்க கரங்களை நீட்ட, இங்கீதம் அறியாத மனிதரை
கண்களால் சுட்டார். வழிபாட்டு மனங்கள் என்பதே நாகரீகத்திற்கு
புறம்பானதுதான் போலும்!
''மனித
உரிமை போராளிகள்'' என்று தெருவுக்கு நாண்கு பேர் இந்தியாவில்
இருக்கிறார்கள். வெட்டுறுவில் புன்னகைக்குகிறார்கள்..ஆனால் மனித உரிமை
குறித்து கிஞ்சித்தும் அறிவும் இருக்காது.சக மனிதனின் கருத்தையும் கூட
எதிரிகளாகவே கருதும் இயல்பும் கொண்டவர்கள்.அண்மைக்காலங்களில் ஜனநாயக
உரிமைகளுக்காக மூடுண்ட அரசுகளை அம்பலப்படுத்தியவர்கள் இருவர் விக்கிலிக்ஸ்
ஜிலியஸ் அசாஞ்சே.எட்வார் ஸ்னோடன்தான்...உண்மையான மனித உரிமைப்போராளிகள்
இவர்கள்தான்.இவர்களின் யுத்தம் அமெரிக்க அரசுடன்தான் என்றாலும்
அமெரிக்காவில் உருவாகும் மாற்றமே உலகளாவிய அளவில் பல அரசுகளை
திறந்ததாகும்.மூடுண்ட அரசுகள் எதுவும் ஜனநாயகத்திற்குரியதல்ல.சிலபல
மனிதர்களுக்காக இயங்கும் வேட்டை நிறுவனம்.அதன் வேட்டை... ரத்தம்...
உயிர்கள் ...நிலம் ...கொள்ளை....ஜனநாயம் என்றிருக்கும்!
அரசுகளில்
இருந்தே மக்களை காக்கும் நிலை உலகிற்கு எற்பட்டுள்ளது. அரசுகளின் இயக்கம்
சமூகத்தின் ''பகுதி''மனிதர்களுக்கானதாக இருக்கிறது.அரசுகளை ''பகுதி''களிடம்
இருந்து மீட்டு மக்களுக்கு உரியதாககல் முக்கியம்!ஏனினில்
ஆண்டவனை!?காட்டிலும் வலுவானதாக இருக்கிறது அரசாக்கம்!
உங்கள் மரணம்
உங்கள் மரணத்தை
கொண்டாடலாம்
உங்கள் மனைவி
உங்கள் மரணம்
அவளுக்கு
சிறகுகள் ஆகலாம்
உங்கள் பாடலை
பாடிவிட்டு
முடிந்து போங்கள்
அவள் பாடலை
அவள் பாடட்டும்