பக்கங்கள்

சனி, 30 மார்ச், 2013

 தயவுசெய்து கைப்பேசியை அணைத்துவிடாதீர்கள்...அழைப்புகளை துண்டிக்காதீர்கள்...
'சார்ஜர்' போட்டுவைக்க மறக்கவேண்டாம்...'நாட் ரீச்சபிள்'அல்லது 'சுவிட்ச் ஆப்'  செய்யப்பட்டுள்ளது  என்ற அறிவிப்பு நீங்கள்/ நாங்கள் மரணம் அடைந்துவிட்டதாக கருதப்படும் அபாயம் இருக்கிறது.ஒருவரின் உயிர்த்திருத்தலை அறிவிக்கும் கருவியாக செல்போன் மாறி இருக்கிறது.கவனாமாக இருங்கள்...இறந்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்துவிடவாய்ப்பு அழித்துவிடாதீர்கள்.தொடர்பில் இருப்பதே  உயிரோடு இருப்பதாக ஆகியிருக்கிறது!
    பன்னாட்டு நிறுவனங்கள் ஒருபுறம்  அரசுகளின் நீட்சியாக நாடுகடந்தளவில் விரிகின்றன.
அதேநிலையில்,அது இயங்கும் நாடுகளில் அரசுகளின் அதிகாரத்தை சிறப்புசலுகையாக தன்னளவில் மட்டுப்படுத்துகின்றன. உண்மையில் பன்னாட்டு நிறுவனங்கள் அரசுகளின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தவே இயங்குகின்றனவா?அல்லது அரசுகளின் அதிகாரத்தை நீக்கும் இயல்பினவா என்பதை அறிவதில்தான் இந்த நிறுவங்களின்  பரவலை ஆதரித்தலும் எதிர்த்தாலும் கைகொள்ளப்படவேண்டும்.உலகளவில் இயங்கும் பன்னாட்டுனிறுவங்க்களின் எண்னிக்கை,பரப்பளவு அதிகாரமட்டத்க்தில் செல்வாக்கு,மறைமுகசெயபாடுகள் மக்களின் முன் வைக்கப்பட வேண்டும். பன்னாட்டு விறுவங்க்களை வெறும் பொருளாதர செயல பாட்டுக்கானதாக மட்டுமே கருத இயலாது.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

பேரழகிகள்


பழைய தோழமைகளை சந்திக்கும்போதில் கடந்துவிட்ட காலங்கள் அலைமோதுகின்றன மனதில்..மீண்டும் திரும்ப முடியாத தூரத்திற்கு வந்துவிட்டதை உணர்த்துகிறது. ஆயிரம் துயரமாய்... மகிழ்வாய் இருந்தாலும் நினைக்கையில் மகிழ்வாய்தான் இருக்கிறது இறந்தகாலம். கண்களுக்கு பேரழகிகளாக திகழ்ந்தவர்களை இப்போது பார்க்கையில் ஏன் சந்தித்தோம் என்றாகிவிடுகிறது. முன்னும் பின்னுமாய் பருத்து உடல் வீங்கிப்போய்.... அடையாளமே தெரியாதளவுக்கு மாறி விட்டிருக்கிறார்கள்! காலம் காயங்களை மட்டுமல்ல ...விசித்திரங்களையும் நிகழ்த்திவிடுகிறதுதான்!

புதன், 21 நவம்பர், 2012

மழை

ஒருபெருமழையில்
கரைந்தன
வண்ணங்கள்
காற்றில்
மிதந்தன
குடைகள்
சொற்களை இழந்தன
மொழிகள்
பறவைகள்
சிறகுகளை இழந்தன
பறவைகள்
யவனம் தொலைத்தன
உடல்கள்
வெள்ளத்தில் மிதந்தன
தெருவோர தெய்வங்கள்
கதைகளை
உதிர்த்துக்கொண்டிருந்தது
வானம்

செவ்வாய், 24 ஜூலை, 2012

திருமணம்

            

காங்கிரஸ்  இரண்டாம் மட்ட தலைவர் ஆர்.கே.தவான்,திருமணம் செய்திருக்கிறார்.ரகசிய திருமணம்! முதலில் மறுத்தவர், இப்போது ஊர்ஜிதம் செய்திருக்கிறார்.ஓழுங்கமைக்கபட்ட பாலியல்பகிர்தலே திருமணம்.பாலியல் மட்டுமின்று இனப்பெருக்கம்,மறுஉற்பததி மனித இருப்பு என்று பொருள் விரியும்.காலம்தோறும் திருமணததின் பொருள் மாறும்.கலாசாரம்,மதம் என்று அதனதன் தன்மைக்கு ஏற்ப பொருள் பெறுகின்றன திருமனம்.''ஓருவனுக்கு ஓருத்தி''-பெருமை இந்தியாவில் உண்டு.பொதுபுத்தியில்  இருந்தாலும் நடைமுறையில் வேறுகள் அதிகம்.
குடும்பம்  என்ற அமைப்பே  அரசு உருவாக்கத்தின் முன்மாதிரி.பாலியல் பகிர்வும் ஆளுமையும் இதன் அடிப்படைகள்.குடும்பஅமைப்பு குறித்து துல்லியமாக வரையறுக்கு முடியாது.போலவே, அரச வடிவங்கள்குறித்தும்.இரண்டுக்குள்ளும் மனிதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் நுண்ணிதாக இயங்குகிறது.பாலியல் என்பதும் அதிகாரம்தான்.குடும்ப அமைப்பில் நலன்களாக மாற்றப்பட்டு இருக்கிறது.திருமணம் குடும்பத்தை உற்பத்தி செய்கிறது.எனில், குடும்பம்  அரசை உற்பத்தி செய்கிறது.குடும்பங்களின் அழிவு என்பது அரசமைப்பின் வீழ்ச்சியில் முடியும்.
திருமண பந்தத்தில் இருப்பவர்கள்  அனைவரும் அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று  சொல்ல முடியாது.வெளியே இருப்பவர்கள் உள்ளேயும் உள்ளே இருப்பவர்கள் வெளியேயும் செல் ல விரும்பும் விசித்திரம்!
தமிழக அரசியலில் இரணடாம், மூன்றாம்  திருமணம் எண்ணிக்கையில் அதிகம்.வெளியே தெரியாது. இன்னும் கூடுதலாக இருக்கும்.''கிழப்பரும் மெய்திய நிலை''யில் இளம்பெண்/மாற்றான் மனைகளை களவாடி கண்ணாலம்!!!.பெரியார் ஊரரிய செய்தார்.ஏற்க முடியாது .எனினும், அவர் மறைக்க வில்lலை..
எம்ஜிஆர்,கருணாநிதி அவர்களின் அரசியல் அடிப்போடிகள்  பலரும் மகன்/மகள்/  வயதில் இரண்டாம் உறவில் மலர்ந்தவர்கள்/
ஓரே வயதினராகவே இருப்பர். மகனும் பேரனும் ஓரே பள்ளியில் படிக்கலாம்.என்று ஆக்கியவர்கள்.
 கற்பின் நிலை இது. ஆணுக்கும். பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைக்க சொன்ன    பாரதி   இப்போது இருந்தால் என்ன பாடி இருப்பான்?
    தனக்கு எனில் கற்பு கத்திரிகாய்...உருக்கு உபதேசம் என்றால் தமிழரின் கற்பு நெறி!  ''ஊருக்குதான் உபதேசம் உனக்கல்லடி கண்ணே''கதைதான்!!!

திங்கள், 23 ஜூலை, 2012

நிஜமான நாயகன்


புதிய...புதிய சாதனைகளை நிகழ்த்தி, மானுடம் தொட்டுஇருக்கும் வெற்றிகளை  பிரகடனப்படுத்துவதுதான் ஒலிம்பிக் போட்டியின் முக்கியத்துவம்.நெருங்கிவிட்ட ‘லண்டன் ஒலிம்பிக்’ போட்டியை கண்டுகளிக்க உலகம் தயாராகிக் கொண்டு இருக்கிறது.
வெற்றிமீதான வெறியை தேக்கி களத்தில் சாதனை நிகழ்த்த உத்வேகத்தோடு  தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள் ஒலிம்பிக் வீரர்கள். பல நாடுகளின் வீரர்களும், கொடிகளும் மைதானத்தில்  பட்டொளி வீசிப்பறக்கும்.காணக்கண்கோடி வேண்டும்தான். பல்லாயிரம் கோடிகள்புரளும்! விரியும் மானுடச்சிறகுகள் புதிய உயரத்தை  எட்டிப்பிடிக்கும்!
    ஒவ்வொரு வீரரும் புதிய சாதனைகளை  படைத்து... உயரங்களை எட்டுவார்கள். அதுவே அவர்களின் இலக்கு. ஆனால், தன் வாழ்வையே சாதனையாக மாற்றியிருக்கும் ஒருவரும் 230 ஙீ250 பிரிவில் பங்கேற்கிறார்.அவர், ஆஸ்கார் பிஸ்டோ ரியஸ்! தென்ஆப்ரிக்காவை சேர்ந்த தடகள வீரர்.25 வயதாகிறது.கார்பன் பைபர் செயற்கை கால்களை  பொருத்திக்கொண்டு பல்வேறு  உள்ளுர், சர்வதேச போட்டிகளில் சாகசம் செய்திருக்கிறார்.
இரண்டுகால்களும்இல்லை.அதனால் என்ன-?
இருக்கவே இருக்கிறது,செயற்கை கால்கள்! தொழில்நுட்ப தெய்வங்களின் வார்ப்புகள்.செயற்கைகால்களை பொருத்திக்கொண்டு ரியசும் தடகளகளத்தில் நிற்கிறார்.நன்றாக இருப்பவர்களே தயங்கும் போட்டியில் தன்னம்பிக்கையோடு கலந்து கொள்கிறார். வெற்றியோ... தோல்வியோ முக்கியம் இல்லை.மற்றவர்கள் ஜெயித்தால்தான் சாதனை.ரியஸ் களத்தில் இருப்பதே சாதனைதான்.வெற்றி, தோல்வி என்ற சாதாரண அளவீடு அவருக்கு பொருந்தாது.
ரியஸ் மீதும் விமர்சனங்கள இருக்கின்றன.அவற்றால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
‘நவீனமான அவரது செயற்கைகால்கள் விரைவாக ஓடுவதறகு சாதகமாக இருப்பதாக’ விமர்சிக்கிறார்கள்.இருக்கலாம். ஆனால்,ஓடுவதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.மற்றவர்கள் இருப்பதை வைத்துக்கொண்டு ஓடுகிறார்கள்.என்றால், அவை இல்லாமலே ரியஸ் போராட வேண்டும்.
விமர்சனங்கள் இருப்பினும் லண்டன் ‘ஒலிம்பிக்’கில்  நிஜமான நாயகன் ‘ஆஸ்கார் பிஸ்டோ ரியஸ்தான்!
மற்றவர்கள் எதிரியை வென்றால் போதும்.இவர் தன் பலவீனத்தையே வெல்ல வேண்டும்.தன்னை வென்றவன்  பிறவற்றை வெல்லுவது கடினம் இல்லைதானே?

சனி, 21 ஜூலை, 2012

மௌனம்

            
காயத்தில் மிதந்த மௌனம்
மகத்துவம்மிக்கது,மௌனம்.  சொற்களின் ரகசியங்களே மௌனமே விளங்கச்செய்கிறது. சொற்களின் மதிப்பும் மௌனத்தில் இருந்தே மலர்கிறது. நிறைகளே  மௌனத்தை தழுவி நிற்கிறது.‘நிறைகுடம் தழும்பாது’&எளியமொழி.மௌனத்தின்காயங்களாகவே மலர்கின்றன சிலரிடம் சொற்கள்.சிலருக்கு சொற்கள் அணிசேர்க்கிறது.இன்னும் சிலருக்கு மௌனம்!
தமிழறிஞர்ஓருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். மௌனத்தின் பெருமை குறித்து பேசினார்....பேசினார்...பேசிக்கொண்டே இருந்தார். ‘நண்பர்கள் நேரக்கள்வர்கள்’ என்கிறது  ஜெர்மாணிய பொன்மொழி.தூரத்தில் ரசிக்க வைக்கின்றவர்கள் அருகில் வெறுக்க வைத்துவிடுகிறார்கள்.அந்த தமிழறிஞரும் அப்படியே...!என் நேரத்தை சித்ரவதை செய்து கொன்று புதைத்தார்.அவர்பேச்சை முடித்தபோது....மெல்ல மலர்ந்த மௌனம் குறித்து  யோசித்தேன்.வெட்டுகாயமாய் கிடந்தது மௌனம்!!!.
சிலர் பேசுதல் பெருமை!சிலருக்கு சிறுமையே!!!