காங்கிரஸ் இரண்டாம் மட்ட தலைவர் ஆர்.கே.தவான்,திருமணம் செய்திருக்கிறார்.ரகசிய திருமணம்! முதலில் மறுத்தவர், இப்போது ஊர்ஜிதம் செய்திருக்கிறார்.ஓழுங்கமைக்கபட்ட பாலியல்பகிர்தலே திருமணம்.பாலியல் மட்டுமின்று இனப்பெருக்கம்,மறுஉற்பததி மனித இருப்பு என்று பொருள் விரியும்.காலம்தோறும் திருமணததின் பொருள் மாறும்.கலாசாரம்,மதம் என்று அதனதன் தன்மைக்கு ஏற்ப பொருள் பெறுகின்றன திருமனம்.''ஓருவனுக்கு ஓருத்தி''-பெருமை இந்தியாவில் உண்டு.பொதுபுத்தியில் இருந்தாலும் நடைமுறையில் வேறுகள் அதிகம்.
குடும்பம் என்ற அமைப்பே அரசு உருவாக்கத்தின் முன்மாதிரி.பாலியல் பகிர்வும் ஆளுமையும் இதன் அடிப்படைகள்.குடும்பஅமைப்பு குறித்து துல்லியமாக வரையறுக்கு முடியாது.போலவே, அரச வடிவங்கள்குறித்தும்.இரண்டுக்குள்ளும் மனிதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் நுண்ணிதாக இயங்குகிறது.பாலியல் என்பதும் அதிகாரம்தான்.குடும்ப அமைப்பில் நலன்களாக மாற்றப்பட்டு இருக்கிறது.திருமணம் குடும்பத்தை உற்பத்தி செய்கிறது.எனில், குடும்பம் அரசை உற்பத்தி செய்கிறது.குடும்பங்களின் அழிவு என்பது அரசமைப்பின் வீழ்ச்சியில் முடியும்.
திருமண பந்தத்தில் இருப்பவர்கள் அனைவரும் அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.வெளியே இருப்பவர்கள் உள்ளேயும் உள்ளே இருப்பவர்கள் வெளியேயும் செல் ல விரும்பும் விசித்திரம்!
தமிழக அரசியலில் இரணடாம், மூன்றாம் திருமணம் எண்ணிக்கையில் அதிகம்.வெளியே தெரியாது. இன்னும் கூடுதலாக இருக்கும்.''கிழப்பரும் மெய்திய நிலை''யில் இளம்பெண்/மாற்றான் மனைகளை களவாடி கண்ணாலம்!!!.பெரியார் ஊரரிய செய்தார்.ஏற்க முடியாது .எனினும், அவர் மறைக்க வில்lலை..
எம்ஜிஆர்,கருணாநிதி அவர்களின் அரசியல் அடிப்போடிகள் பலரும் மகன்/மகள்/ வயதில் இரண்டாம் உறவில் மலர்ந்தவர்கள்/
ஓரே வயதினராகவே இருப்பர். மகனும் பேரனும் ஓரே பள்ளியில் படிக்கலாம்.என்று ஆக்கியவர்கள்.
கற்பின் நிலை இது. ஆணுக்கும். பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைக்க சொன்ன பாரதி இப்போது இருந்தால் என்ன பாடி இருப்பான்?
தனக்கு எனில் கற்பு கத்திரிகாய்...உருக்கு உபதேசம் என்றால் தமிழரின் கற்பு நெறி! ''ஊருக்குதான் உபதேசம் உனக்கல்லடி கண்ணே''கதைதான்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக