பக்கங்கள்

வெள்ளி, 16 மார்ச், 2012



   அச்சமூட்டுகிறது
   இத்தனை கோரக்கொலைகள் நம் அருகில். ஓங்கி கத்தினால் கேட்கும் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு நாட்டில் நடந்தும் நம் மனசாட்சிகள் இருளில் புதைந்து கிடந்ததை    நினைக்கும் நேரமெல்லாம்   வெட்கம் பிடுங்கித் தின்னுகிறது.
   போர் என்பதே நியாயப்படுத்த முடியாதுதான்.எந்தப்போரும் நியாமில்லைதான்.என்றாலும் பாதிக்கப்பட்டவன் இயலாமையின் வலியுடன் ஆயுதம் தூக்கினால் அதை குறைந்த பட்ச நியாயம்பாராமல் உலகம் சண்டித்தனம் செய்து அழித்தது. யுத்த தர்மங்கள் இலங்கையில் செத்துப்போயின.புத்தனின் பெயரால் துவங்கிய வெறியுட்டல் விஷ குண்டுகளால் முடித்துவைக்கப்பட்ட்ன.புத்தனுக்கு ரத்தாபிஷேகம்.தமிழர் ரத்தத்தால்.
      விஷ குண்டுகளை வீசி கொத்து கொத்துதாக பிணங்களை விழச்செயதும் உடல்களை உருகச்செயதும் நிகழும் மரணத்தை அறியாமலே முடிந்து போவதுமானான ஒரு பெரும் மனிதக்கொலைகளே  நடந்திருக்கிறது.அருகில் //காந்திய//அகிம்சை தேசம்.,வஞ்சகமாக கள்ள மௌனம் சாதித்து வேஷம் போட்டது.
               .பாராளுமன்றத்தில் பொய்களை கூவினார்கள்.உலகிற்கு பொய்யை விற்றுக்கொண்டிருன்தனர். தமிழ்நாட்டில் வேர்ருகோஷமும் பல்வேறு கொஷ்டியுமாக அரசியல் பண்ணினார்கள்.தாவரங்களுக்கும் பிற உயிரகளுக்கும் கூடகுரல்கொதுப்பவர்களும் மனிதர்களுக்காக பேசாமல் பிணங்களாய் கிடந்தனர்.பேசியவர்களில் பலரும் அரசியலுக்காக பேசினார்கள்.இந்தகாலத்தில் வாழ்ந்தவன் என்ற முறையில் ஒரு மிகப்பெரும் கொடுமையை கண்டும் காணாமலும் வாழ்ந்ததற்காக வெட்கப்படுகிறேன்.
                இத்தனை துயரங்களுக்கு பின்னும் தமிழ்நாட்டைதவிர இந்தியாவின்     எந்த மாநிலத்திலும் இது குறித்து யாரும் பேசவில்லை என்பதுதான் அச்சமூட்டுகிறது.
 






வியாழன், 15 மார்ச், 2012

   
 





                                      தீராமல்
                       சொல்ல இருக்கிறது
                        கதைகள் 
                           சொல்ல இருக்கிறது
                          கண்ணீர்
                      சொல்ல  இருக்கிறது
                       வருத்தங்கள்
                    சொல்ல  இருக்கிறது
                    வேதனைகள்
                    சொல்ல இருக்கிறது
                    நினைவுகள்
               சொல்ல இருக்கிறது
                 வெட்கங்கள்
             சொல்ல இருக்கிறது
                 குற்றங்கள்
               சொல்லஇருக்கிறது
              இன்னும் நிறைய

புதன், 14 மார்ச், 2012

                                                 அரசு
  ஒரு நாடு இனவாத கொள்கையை பின்பற்றினால் அதற்கு அந்த அரசும் அதை இயக்குபவர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும். அதற்கான //விளைவு//களை உருவாக்கியவர்கலாகவும் அவர்களே இருக்கிறர்கள்.
             ஒரு நாட்டின் முழு மக்கள் தொகுதியையும்   பிரதிபலிக்க வேண்டிய அரசு ஒரு இனத்தை மட்டும் சார்ந்து செயல்படுகின்ற நிலையில், மறு தரப்பு மக்களை பிரதிபளிக்கும்  அரசு இயந்திரமாக போராட்ட இயக்கம் அங்கீகரிக்கப்படுவதே நியாயம்.
             தன்  பகுதி மக்களின் உரிமைகளுக்காவும் நிலத்திற்காகவும் போராடும்  இயக்கத்தை பயங்கரவாதமாக முத்திரை குத்திய அரசியல் அநீதியாலே ஈழத்தமிழர்களின் போராட்டம் நசுக்கப்பட்டது . அதுபோலவே புலிகள் குறித்த விமர்சனங்களுக்கும் இடம் உண்டு.அதை மறுக்கும் தவறையும் செய்யத்தேவை இல்லை.
 
 
                                    துரோகம்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இருப்பு-இருப்பின்மை குறித்த விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் இருக்கிறது. இலங்கை அரசு நந்திகடலில் கொல்லப்பட்டதாக கூறியது. தற்போது சேனல்- 4   தொலைக்காட்சியும் அதை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர் தரப்பில் பல்வேறு தரப்புகள்,தளங்கள்.மறுப்பும்,. எதிர்ப்பும் தெரிவித்துக்கொண்டு. பிரபாகரன் மரணம் அடைந்திருந்தால் அதுகுறித்த யதார்த்தத்தை ஒப்புகொள்வதுதான் சரியானது .அதுதான் ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியல் திட்டமிடலுக்கு ஏற்றது. அவர் மரண செய்தி குறித்தும் அரசியல் செய்வது அவருக்கு செய்யும் அநீதி.
       சிங்கள அரசால் கொடுரமாக பிடித்துவைத்து .கொல்லப்பட்டிருந்தால் அதையும் மறைப்பும் திரிப்பும் இல்லாமல் வெளிப்படுத்துவதே அ றம். அதற்கும் பதில் அளிக்க வேண்டிய நிலை சிங்கள அரசுக்கு ஏற்படும்.அவர் கொல்லப்பட்டிருந்து...  அதை மறைப்பது...  சிங்கள அரசுக்கு செய்யும் உதவியாகவே இருக்க முடியும். இதை மறைப்பதில் அரசியல் தந்திரம் என்று எதுவும் இருக்க முடியாது. உண்மையை மக்களிடம் இருந்து மறைப்பது எந்த மக்களுக்காக அவர் போராடியதாக சொல்லப்பட்டதோ அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.
        













வெள்ளி, 9 மார்ச், 2012



                     தமிழர்க்கு தேவை
          ஜெனீவா தீர்மானத்தில் இலங்கை அரசை கண்டிக்கும் வார்த்தைகள் கூட இல்லைதான்.தமிழர்களுக்கு அதில் நியாயமும் கிடைக்காதுதான்.தங்கள் சுயநலத்திற்காக இலங்கை அரசை தங்கள் கட்டுக்குள் கொண்டுவரும்நோக்க்ம் தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்பதும் நிஜம்தான்.
  
                                    உலக அரசியல் ஈழம் என்ற சிட்டுக்குருவிகூட்டை சிதை த்துப்போட்டது.தாம் வாழ்ந்த கூடுகாக்க போராடிய சிட்டுக்குரூவிகளை பயங்கரவாதிகளாக
முத்திரை குத்தி சிதைத்தது.அனைத்தும் உண்மை .

        எனினும், இன்றைய நிலையில் மகிந்தரை கண்டிக்ககூட இல்லை என்றபோதும் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானத்தின் வெற்றி தமிழர்க்கு தேவை.ராஜதந்திரத்தில் இது ஒரு சயொரு வெற்றியாக இருக்கும்.
                   ஆனால் நீண்டநாள் நோக்கில் போராடும் பிற   தேசியயங்களோடு இணைந்து செயல் படுவதே ஈழத்தமிழர் எதிர்காலத்துக்கு ஏற்றது.விடுதலை என்பது போராட்டத்தில்தான் மலரும்.அன்னியநாடுகளின் நிழழில் இருந்து அதை ஒருபோதும்ம் பெற முடியாது.
                                          இந்தியா முன் 

 
         ஆதரவு-எதிர்ப்பு-நடுநிலை இந்த மூன்றுத் தெரிவுகளும்தான்  ஜெனிவா மனிதஉரிமை கூட்டத்தில்  இலங்கைக்கு எதிராக அமேரிக்கா கொண்டுவரும்  தீர்மானத்தில் இந்தியா முன் உள்ளது.
            இந்தியா இலங்கையை ஆதரிக்கலாம்.அல்லது எதிர்க்கலாம்.அல்லது நடுநிலை வகிக்கலாம்.ரஷ்யா,சீனா  முதலிய இரண்டு வல்லரசுகள் இலங்கையின் பக்கம் உள்ளன.அமெரிக்க இங்கிலாந்து,பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகள் எதிராக உள்ளன.
               முஸ்லிம் நாடுகள் இலங்கையை ஆதரிக்கலாம்.இந்தியா ''குறிப்பிட்ட  நாட்டுக்கு]]எதிராக கொண்டுவரப்படும் தீர்மானம் சரியாக இருக்காது என்று கருதுவதாக தெரிவித்துள்ளது.இருப்பினும் தெளிவாக சொல்லவில்லை.அமைதிகாக்கிறது.
           வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலனையை சகோதர நாடு என்று வர்ணித்துள்ளார்.ஆனால்.  சகோதரநா ட்டை  விட சொந்த நாட்டு [தமிழர்]மக்களின்  உனார்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டிய கடமை இந்தியாக்கு உண்டு.  லட்சக்கணக்கான மக்கள் யுத்தநேரியை மீறி இனப்படுகொலை செய்யப்பட்டனர். இந்தியா ஆயுதம் கொடுத்து ஊக்கப்படுத்தியது. தமிழர்கள் நசுக்கப்பட்டபோது இலங்கையின்     பக்கம் இருந்தது.அரசியல் நீதிக்கும்  அநீதிக்கும்மான மோதலில் அநீதியின் பக்கம் நின்றது.இப்போதும் இலங்கையின் பக்கம் நின்றால் வரலாறு மன்னிக்காது. எதிர்காலத்தில் பூகோளஅரசியலில் ஈழத்தமிழரை ஆதரிப்பதே இந்தியாவுக்கு நல்லது. இன்றைய நிலையில் இந்திய ஆளுந்தரப்பு  நடுநிலை பாத்திரம் வகிக்ககூடிய சாத்தியம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தியா கொன்றவர்களின் பக்கம் நிற்குமா? கொல்லப்பட்டவர்களின் பக்கம் நிற்குமா என்பதை  பார்ப்போம்.  ஈழத்தமிழரை பொறுத்தவரையில் வல்லரசு நாடுகளின் ஆதரவை நாடுவதை காட்டிலும்  ஓடுக்கப்பட்ட, அரசு இல்லாத அரசுகளுக்காக  போராடும் தேசியஇனங்கலோடு இணக்கம் கண்டு போராடுவதே சிறந்தது.