பக்கங்கள்

திங்கள், 13 மார்ச், 2017

லட்சுமண அய்யர் என்றொரு மானிடன்
சாதி ஓழிப்பில் பலர் இருக்கிறார்கள்.இருந்திருக்கிறார்கள்.அநேகமாக பிற சாதியை ஒழிப்பவர்கள்.இல்லையெனில் திருமணத்தில் ஓழிப்பார்கள்.தன்னளவில் தொடர்வார்கள்.அல்லது திருமணம் முடிந்தும் வரும் தலைமுறையை சுயசாதியில் இணைப்பர்.அனைவருக்கும் இது பொருந்தாது.
//அவர் (காந்தி) சொன்னார் நான் செய்தேன்.நம்மகிட்டஎதுக்குங்க பேட்டியெல்லாம்.காந்தியடிகளின் எளிமைக்கும்
தியாகத்துக்கும் முன்னால் நான் செய்கிற காரியங்களெல்லாம் ஒன்றுமில்லை தம்பீ!கோபியைச் சுற்றி650 ஏக்கர் நிலமும்,கோபி நகரத்துக்குள் 40 ஏக்கர் நிலமும் இருந்ததே என வினவியபோது,Òபாதியை தர்மமாக கொடுத்திட்டேன்.பாதிவியாபா£ நஷ்டத்துல போயிடுச்சு.இப்போது ஒரு சென்ட்நிலம்கூடச் சொந்தம் இல்லை.நாங்கள் தங்கியுள்ள இந்த வீடு ஏலத்தில் போயிடுச்சு.ஏலம் எடுத்தவுக வீட்டுக்காக ஏந்தப்பணமும் வாங்காம திருப ப்பிக்கொடுத்துட்டாங்கÓஎன சிரிக்கிறார் அய்யர்.
Òபிள்ளைகளுக்கென்று எதுவும் சேர்த்துவைக்காம,எல்லாத்தையும் காலி பண்ணிட்டோமேனுவருத்தமாக இல்லையா--?Óஎன்றால்,Òஇல்லை,அவர்களுக்கு வேணும்னா,தானே முயற்சி பண்ணிச்சம்மாரிச்சிக்க வேண்டியதுதான்Óஎன்னைப்பொறுததவரைக்கும் காந்தி கொடுத்த கடமையை நல்லபடியா செஞ்சிட்டோம்கிற திருப்தியும்சந்தோஷமும் இருக்குÓஎன்றார்.
லட்டுமணஅய்யர் என்னதான் செய்தார்?
கோபியில் 26 பொதுக்கிணறுகள் இருந்தபோதும் அதில் நீர் எடுக்கும் உரிமை தலித் மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது.உயர் நீதிமன்றத்தை அணுகியலட்சுமண அய்யர்,அந்தத்தடையை நீக்கி அனைவருக்குமான உரிமையை வாங்கிக்கொடுத்தார்.தற்போது நகரின்நடுவிலிருக்கும் புதுப்பாளையம் காலனியில்இருந்த அருந்ததியினரின்வாழ்விடத்தைப் பெற்றுக்கொடுத்தார்//-கே.சந்ரு,(தி இந்து தமிழ் 22-02-2016)
அத்துடன் நின்றுவிடவில்லை.
கோபிநகர குடி நீர் திட்டத்தை கொண்டுவந்தார்.மனிதர்கள் மலத்தை மனிதர்களே அள்ளும் கொடுமையான வழக்கத்துக்கு முடிவுகட்டினார். கோபி கூட்டுறவு சங்க கட்டிடடம் மற்றும் கோபி கூட்டுறவு வீட்டு அடமானவங்கியை ஏற்படுபடுத்தியிருக்கிறார். கொங்கர் பாளையத்தில் 250 ஏக்கர் நிலத்தில்கூட்டுப் பண்ணை விவசாயத்தை ஏற்படுத்தியிருக்கிறார். காமராஜர் மறைவுக்குப் பின் ,ஜனதா கட்டியில் இணைந்தார்.
ஆனால், அவருடைய இறுதி யாத்திரையில் எவ்வளவு பேர் கலந்துகொண்டனர்? .நினைவிழப்பால் சூழப்பட்ட ச மூகம் இது என்பதற்கு அதை சான்றாக கொள்ளலாம்.
அதிகாலை. விடிந்தும் விடியாதநிலை. கைத்தொலைபேசியின் ஒலி கடத்தியில் மிதந்து சென்ற அக்குரலை கேட்டேன்..
'' சித்தி, என் மாப்பிள்ளை அப்படியே இருக்கு. கல்யாணமாகி இவ்வளவு வருஷமாச்சி. இன்னும் வயசே தெரியலை. தினமும் பழச்சாறு குடிச்சே அப்படியே இருக்கு. எனக்கு பயமா இருக்கு சித்தி''-ஒவ்வொரும் மனவெளியின் தனித்தனியான ஒரு உலகில் வாழ்கிறோம். உடல் குறித்தும் மனம் குறித்தும் கருதுகோள் வைத்திருக்கிறோம்.அது குறித்த நிரூபணங்கள் எதுவும் தேவையில்லை.
'நான் கண்ணால் கண்டேன் 'என உரக்கச் சொல்கிறோம். சட்டம் கண்ணால் கண்டதை மட்டும் ஏற்பதில்லை,. சான்றும் வேண்டும். ஆனால், கண்ணால் கண்டதாக சொன்னால் நம்பிவிடுவோம். மனஅழுத்தம் இருந்தால் மாயக்காட்சி-மாயக்குரல் கேட்கும். கவலை வாட்டும். நெருக்கமானவர்களை வெறுக்கும். கண்ணால் கண்டேன் என்பதை இன்னும் நம்பத்தான் வேண்டுமா?
//நல்ல மனிதர்களோட வாழறதுதான் இன்னிக்கு ரொம்ப சிரமமான விஷயம். எனெனில் அவர்கள் ஓவர் பர்ஃபெக்டா இருக்கிறதால, பர்ஃபெக்ஷனை எல்லா இடத்துலயும் எதிர்பார்ப்பார்கள்//.-மனநல மருத்துவர் என்.ஷாலினி (கல்கி 12-03-2017).
மனம் ஒரு புதிர்.பெரும் புதிர்.விளையனூர் எஸ்.ராமச்சந்திரனிடம்தான் சில விளக்கங்களை பெற முடியும். நாம் அறியும் உண்மைகள்-காட்சிகள் போன்றவற்றில் நரம்புகளின் பங்கு மிக முக்கியம்.
விளையனூர் எஸ்.ராமச்சந்திரனின் ''உருவாகும் உள்ளம்'' (தமிழில்:இரா.நடராசன்) வாசிக்கும்போது நிறைய அறிய முடிகிறது. நமது வாழ்க்கை நரம்புகளாலானது. நாம் அறியும் உண்மைகள் மிகவும் சிக்கலானது. உண்மை என்பது உண்மையா? இலலையா? என்பதை தீர்மானிப்பதும் மிகவும் கடினம்!

புதன், 21 செப்டம்பர், 2016

தீபாவளிக்குக்கும் ஒணத்துக்கும் தொடர்பு உள்ளதுபோல தெரிகிறது. ஓணத்தில் மகாபலி என்றால் இங்கு நரகன். அசாம்பகுதியின் ஜோதிஷபுரம் என்ற பகுதியின் மன்னன். அவனது தாயார் சத்யபாமா.பூமாதேவியின் அம்சம் பொருந்தியவள்.தாயாரின் கையால்தான் சாவு என்ற வரம் வாங்கியவன் நரகன்.தந்தை சாட்சாத் கண்ணன்.விஷ்ணுவின் அவதாரம். ஒருசண்டையில் சத்யபாமாவின் மூலமாக காலி செய்கிறான் கண்ணன் அதவது தந்தை.பூர்வகுடிகளாகிய நாகர்களை வென்றுஅரசகுடிகள் அதிகாரத்தை கைப்பற்றியதாகலாமா?என்றால் இங்கே ஆரியத்தின் சதி என்று எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை.சமணர்களும் தீபாவளி கொண்டாடுவது கூடுதல் செய்திகேரளமும் ஈழமும் கொண்டாடாததுவிதிவிலக்கு.இதற்குள்ளும் கொஞ்சம் சென்றால் இன்னும் கொஞ்சம் அறியலாம்.

Dictionary

Dictionary: Tamil English Dictionary English Tamil அகராதியை எடு

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

நடு நிசியில் 
கசிகிறது 
நிலா 
நதியில் நீந்திக்
கொண்டிருக்கிறான் 
அவன்
இருள்
கவிந்துக் கிடக்கும்
அறையில்
புணர்ந்து கொண்டிருக்கலாம்
அவள்
அவளுக்கும்
அவனுக்குமான
வெளிகள்
கதவுகளாலானது

திங்கள், 16 மார்ச், 2015

 தலை
உதிர்
கிளி
மரக்கிளையின்
 சிறகாய்
விரியும் 
பொழுதுடன் 
 முடியும்
 கனவு...
யாரதாய் இருக்கும்...