பக்கங்கள்

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

    வீடுகள் குறித்தொரு...
 விசித்திரமானது வீடு.
கொஞ்சம் புகைப்படங்கள்
 மரணித்தவர்களின் குறிப்புகள் ....
 வாழ்கின்றவர்களின் அடையாளமாக...
 கொஞ்சம் கதைகள்.....
 மனிதர்களின் அலைவுகள்
 வீடுகளி ல்  முடிகிறது.
 எல்லா பயணங்களும்
  வீடுகளில்தான் முடிகின்றன.
  யாரோ ஒருவரி வருகைக்காகவோ...
 உறவுகளின் கூடுகைக்காவோ
 காத்திருக்கின்றன   வீடுகள்.
  வீடுகளுக்காகவேனும் .கூடுங்கள்...
   அடையாளம் இல்லாத விடென்று எதுவும் இல்லை.
  அரசுகள் அளிக்கும் கதவிலக்கங்கள்
  மட்டுமே அடையாளமாக இல்லை.
   இன்னார் வீடென்று....
 மனிதர்களின் பெயர்களால்...
 முக்குவீடு...முதல்வீடு. பழைய வீடு.
  உடைந்தவீடு...பெரியவீடு...
 புதுவீடு..பெரியவீடு...செத்துபோனவர் வீடு...
 சாமியாடிகளின் வீடு...மந்திரவாதியின் வீடு....
  பால்காரர்வீடு...சலவைகாரர் வீடு.....
     குழந்தைகளின் பெயர்களால்
       தெருக்களின் பெயர்களால்
     வட்டப்பெயர்கலால்  அமைந்தவீடுகளும் உண்டு.
  வாழ்ந்துகெட்டவர்களின் வீடுகள் என்றும்
   கெட்டாலும் மேன்மக்கள் என்றானவர்களின் வீடுகளும்
   சிறியதாகவோ பெரியதாகவோ காட்சியளிக்கின்றன.
 வீடுகள் இல்லாத மனிதர்களும்
  மனிதர்கள் இல்லாத வீடுகளும் .
காத்திருக்கின்றன  கிடைத்தலுக்காக.
  குழந்தைகள் சத்தமிடல்...
   பெரியவர்கலளின் சிரிப்பு....சண்டை  பிடித்தல் ..
 அழுதுபுலம்பல்...
  மரணத்தின் வெறுமை என்று தான்
      வீடுகளை கடக்கமுடிகிறது.
   கணவர்களின் வருகைக்காக கதைகளுடன்
 காத்திருக்கும் பெண்கள்
   கணவர்களுக்கு கடத்துவதற்கு!
  பெரும்புனைவொத்தவை வீடுகள்...!
   வீடுகளை கொண்டாடுங்கள்...!வரலாறு என்பது வீடுகளும் சார்ந்தது.
 வீடுகள் குறித்த குறிப்புகளை  குழந்தைகளிடம் கதைகளாக பகிருங்கள்...நினைவடுக்கில் இருக்கட்டும்.
 வீடுகளே மிகவும் ஆகர்ஷிப்பதாக தோன்றுகின்றன.அலைந்துழலும் வாழ்வில்...!  வேறெதற்காக திரும்பிக்கொண்டிருக்கிறோம்,
  ஊர் கடந்தும். நாடுகடந்தும் வீடுகளுக்கு!

கருத்துகள் இல்லை: