பக்கங்கள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

                    உறவுகள்!

விவாதங்களால் ஜனநாயகத்தில் தெளிவுபிறக்கும். ஜனநாயதத்தின் அடிப்படையே கருத்துகளின்விவாதம்தான். பேசுவதன் நோக்கமே கருத்துகளைவிளக்கி, புரியச்செய்வதும், பரஸ்பரம் புரிந்துகொள்வதும்தான்.ஆனால், விவாதம் இல்லற வாழ்வில் பெருத்த சேதத்தை ஏற்படுத்துகிறது.விவாதத்தை தவிர்க்கவிரும்பி,மௌனத்தை கடைபிடித்தால் அதுவும்  அலட்சியமாக கருதப்படுகிறது.எனவே விவாத்தின்போது இடம்பொருள் அறிந்து கவனமாக நடந்துகொள்ளுங்கள்.Ôஓரு வார்ததைகொல்லும் ஓரு வார்த்தை வெல்லும்Õ என்பதைபுரிந்துகொள்வது முக்கியம். பொதுவாக,சிறுபொறியில் இருநுது பெரும் நெருப்பு உண்டாவதுபோல,சாதாரமாணமாக  தொடங்கும் விவாதம் கடைசியில் பெரும் சண்டையில்முடியும்.விவாதம் திசைமாறி சண்டையாக மாறுவதற்கு  முன்பு சுமூகமாக முடித்துவிடுங்கள்.ஆத்திரத்தில் வார்த்தையை சிந்தினால் அது உறவை சிதைத்துவிடும். தம்பதியர்விவாத்தின்போது மிகவும் கவனமாக சொற்களை உபயோகியுங்கள்.ஒரு சிறுபுன்னகையுடன் விவாத்ததில் நடந்துகொண்டால் நிலைமையை சரியாக கையாளமுடியும். ஆனால்,  நிதானமாக யோசித்து செயல்படும் தம்பதியரும் கூட சிலநேரங்களில்
சுயக்கட்டுப்பாட்டை இழந்து வார்த்தைகளை
கொட்டிவிடுகிறார்கள்.வெடித்துக்கிளம்பும் வார்த்தைகளின் சூட்டில்எதற்காக விவாதம் தொடங்கியதோ அதை  மறந்துவிட்டு   தவறாக பயன்படுத்திய வார்த்தைகளை பிடித்துக்தொங்கிக்கொண்டு,புதியாபுதிய முடிச்சுகளை போட்டு சிக்கலை அதிகப்படுத்திவிடுகிறார்கள்.
மௌனம்
தம்பதியரில் ஓருவர் கோபத்தில் தாறுமாறாக கத்திஆர்பாட்டம்செய்யும்போது, மற்றவர் Ôஎதற்கு வம்புÕ என மௌனம் காப்பது நல்லதுதான்.ஆனால், இது எப்போதும் சரியாக இருந்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.சூழநிலைக்கு தக்குவாறு நிலையையை மௌனத்தை பயன்படுத்துங்கள்.உங்கள் Ôமௌனம்Õ அலட்சியமாக கருதப்படுவதற்கு வாய்ப்புள்ளது.இது இன்னும் ஆபாத்தானது.
ஆண்களில் சிலர் சண்டையை தவிர்க்க நினைத்து, முன் எச்சரிக்கையாக வெளியே கிளம்பிவிடுவார்கள். எதிர்தரப்பு இதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதை பொருத்தே இதன் பயன் அமையும். இல்லாவிட்டால் Ôநான் பாட்டுக்குகத்துறேன். நீ என்னய மதிக்காம  வெளியே சுத்திட்டு வாறியா-?Õஎன்று கருமுவார்கள்.எங்கே போனாலும் மறுபடியும் வீட்டிற்குதானே வரவேண்டும்.Ôவா வா...Õஎன்று எப்போதும் அழைப்பதாக வீடுதானே இருக்கிறது.வெளியேறுவதற்கு முன்பே பிரச்சினையை ஓரளவுக்கு  தணித்துவிட்டு  வெளியேசெல்லுங்கள்.இன்றைய இளம் பெண்களில் பலரும்  பொறுமையற்றவர்களாக உள்ளனர்.
பெரும்பாலான குடும்பங்களில் பெண்களின் அதிகாரமே செயல்படுவதால்  பெண்ணின் மொத்த  குடும்பத்தையும் பதம் பார்த்துவிடும்.
சகோதர உறவு
அதுபோல், என்னதான் பாசக்கார அண்ணன்&தம்பியாக இருந்தாலும் அக்கா&தம்பி என்றாலும்  அந்த கவனமாக பராமரியுங்கள்.  ஆயிரம் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், எப்போதும் உறவுக்கு கைகொடுத்து உதவுவதும், துயரத்தில் கண்ணீர் துடைப்பதும்    சகோதரஉறவுகள்தான்.
என்றாலும்,இன்றைய மனைவிகளை பொருத்தவரையில் குடும்பம் என்பது தானும், தன்கணவனும்,குழந்தைகளும் என்றுதான் நினைக்கிறார்கள்.ஓரு சில மனைவிகள்தான்  சகோதரஉறவை அங்கீகரிக்கிறார்கள்.மற்றவர்கள் அழகாகன இந்த உறவை உடைத்து நொருக்கிவிடுகிறார்கள்.
தாழ்வுமனப்பான்மை
தாழ்வுமனப்பான்மையும், பொறாமை¬யும், பெண்களிடம் பழிவாங்கும் உணர்வை  தோற்றுவிக்கிறது. நல்லநோக்கில் சொல்லப்படும்  ஆலோசனைகளையும் தவறாகவே  தாழ்வுமனப்பான்மை நினைக்கவைக்கும்.  எதிர்மறை சிந்தனைகளே இவர்களை வழிநடத்துவதால் உரையாடி பயனில்லை. எதிர்மறை  சிந்தனையால்    எல்லோரிடமும் சண்டைபிடிப்பார்கள்.பிறந்தகத்தில் போதுமான அன்பு கிடைக்க பெறாதவர்களிடம் கவனத்துடன் நடந்துகொள்ளவேண்டும்.கணவர்களிடம் அதீதஅன்பை வெளிப்படுத்துவார்கள்.ஆனால்,தன்னிடம் இருந்து கணவனை யாராவது பிரித்துவிடுவார்களோ என்ற சந்தேகம் இருந்துகொண்டேஇருக்கும்.
வெறுப்பை போலவே அதீதஅன்பும் மனநோய்தான்.இந்தவகை பெண்களை அடிக்கடி வெளியே அழைத்துச்செல்வது  நல்லது.சந்தோஷமாக இருப்பார்கள். வெளியே பலவகையான மனிதர்களையும் சந்திப்பதால் இவர்களின் தாழ்வுமனப்பான்மை நீங்கலாம்.
விமர்சனம்
தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களால்  விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாது.தாங்கள் சொல்வதே எப்போதும் சரி என்றே கருதுவார்கள்.அதையே மற்றவர்களும் செய்யவேண்டும் என்று  எதிர்பார்ப்பார்கள்.தாங்கள்விரும்புவது நடக்காவிட்டால் வீட்டை  ரணகளமாக்கிவிடுவார்கள்.இந்தவகை பெண்களை மோசமானவர்களாக கருதுவதைவிட பாதிக்கபட்டவர்களாக கருதுவதே சரியானது.இவர்களின் மனச்சிக்கல் தீர்ந்தால் குனச்சிக்கல் தீர்ந்துவிடும்.
இல்லத்தரசிகள்
வார்த்தை,செயல்களில் அவர்களுக்கு பாதுபாப்புஉணர்வைகணவன் அடிக்கடி  வெளிப்படுத்தவேண்டும். இல்லாதுபோனால்   குடும்பத்தில் சிக்கல்தான். பல்கலைக் கழகமாக  இருக்கவேண்டிய Ôகுடும்பத்தின் கதைÕயை  ஊர்வாய்க்கு அவல்ஆகிவிடும்.
பொதுவாக,வீட்டிற்குள் இல்லத்தரசியாக   வாழும்பலபெண்களுக்கும்ஓருவித தாழ்வுமனப்பான்மை சிக்கல் உண்டு. வேலைக்கு செல்லும்பெண்ணுக்கு வேறுபிரச்சினைகள்
இருப்பதாலும், பணவிஷயத்தில் முடிவெடுக்கும் சுதந்திரம் இருப்பதாலும் தன்னம்பிக்கையோடு இருக்கிறார்கள். மற்றவர்களுக்கும் பிரச்ச¬னைகள்  இருப்பதை புரிந்துகொள்வதால் உலகில் தமக்குமட்டுமே  பிரச்சினை என்ற கருத்து இவர்களிடம் இல்லை.இதனாலே தன்னம்பிக்பேயாடு இருக்கிறார்கள்.
ஆனால்,இல்லத்தரசியாக  இருப்பவர்களுக்கு   வெளியிடங்களுக்கு செல்லும் வாய்ப்பில்லாததால்புதிதாக சிந்திக்கும் திறனை இழந்துவிடுகிறார்கள்.காலத்திற்கு ஒவ்வொத கண்ணோட்டத்ததுடன்வாழ்கிறார்கள்.இவர்களுக்கு பிறரிடம் பழகுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தால் கற்றுக்கொள்வார்கள்.
கணவனை நம்பியே வாழவேண்டிய சூழ்நிலை இருப்பதால் பொருளாதார பாதுகாப்பின்மையும் இவர்களை ஆட்டிப்படைக்கிறது.
கணவன்&மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டாலும்  உடனே, Ôஎனக்கென்ன ஆச்சுÕ என்று வீட்டை விட்டு வெளியே கிளம்பிவிடக்கூடாது. வெளியே போய்விட்டால் சண்டைவராது என்பது  அந்தக்காலம். எப்படியும் வீட்டிற்கு வந்துதானே ஆகவேண்டும்.
உலகில் எல்லாபிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது. பிரச்சினை எதில் தோன்றுகிறதோ அதிலேயே தீர்வும் இருக்கிறது. என்றாலும் உளவியல் நிபுணர்களையோ ஆலோசகர்கயையோ, திருமணஆலோசகர்களையோ நாடுவதில் தவறுஇல்லை.அவர்கள் சரியான நபர்களாக இருப்பது முக்கியம்.இல்லையெனில் வாழ்க்கை கசக்கும்.சிறகுகள் முறியும்.கவனம்!
காரணமே தேவையில்லை
விவாகரத்துக்கு இப்போதெல்லாம் பெரிய காரணங்கள் தேவையில்லை...என்றாகியுள்ளது.அந்தளவுக்கு தம்பதியர் உறவு   சிக்கல் மிகுந்ததாகியுள்ளது. எப்படியாவது இவன்-/இவளிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணமே பல தம்பதியருக்குஓடுகிறது. விட்டுக்கொடுப்பது  இப்போது  கவுரவகுறைச்சல் என்றநிலை உருவாகி இருக்கிறது.உண்மையில் இல்லறத்தில் விட்டுக்கொடுத்தவர் வாழ்வு கெட்டுப்போவதில்லை.விட்டுக்கொடுக்காதவர்கள் வாழ்வின் பிற்காலத்தில் மோசமான விளைவை சந்திக்கிறார்கள்.
உரையாடல்
கணவன்&மனைவி இருவருக்கும் இடையே உரையாடல் முக்கியம். உரையாடல் இல்லாத உறவுகள் பாதி மரணம்தான். எவ்வளவு பரபரப்பாக இருப்பினும் தம்பதியர் தினமும் நேரம்ஓதுக்கி உரையாடமறக்கவேகூடாது. அப்போதுதான் பரஸ்பரபுரிதல் உருவாகும். கருத்துகளை பகிர்வதற்கே உரையாடல் மோதிக்கொள்வதற்கல்ல. வார்த்தை  வழுக்கினால் வாழ்க்கை சகதியாகிவிடும். பேச்சு பரிமாற்றங்கள் சரியாகஅமையாவிட்டால் அதுவே பிரிவிற்கு வெற்றிலைபாக்குவைத்த அழைப்பாகிவிடும்.
வெறுப்பு,எரிச்சல்,எடுத்தெறிந்து பேசுவது முறையற்றது. தோற்றுப்போகின்றவர்களின் மொழி அது.வெற்றிக்கரமான மனிதார்கள் ஓருபோதும் இவ்வாறு செயல்படுவதில்¬ல்.
 அதுபோல், பேசும்போது எதிர்தரப்பின் நிலையை,அறிவை உணர்ந்து வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும்.
ஒருசொல்லின் அர்த்தம் உச்சரிப்பவர்களை மட்டும் பொறுத்தல்ல, அதை கேட்கின்றவர்களின் நிலை,சிந்தனையின் மட்டத்தை பொறுத்தும்தான் அமையும்.கொஞ்சம் தவறினாலும் இடறிவிழநேரிடும்.எனவே,எதிர்தரப்பின் நலையறிந்து சொற்களை பயன்படுத்துவது முக்கியம்.
ஒருபோதும் நடந்ததை நினைவுபடுத்தாதீர்கள்.இற்நதகாலம் திரும்புவதில்லை.பிறகேன் அது குறித்து பேசி புண்ணைக்கிளறிக்கொண்டிருக்க வேண்டும்.மனைவியின் அல்லது கணவனின் குடும்பத்தை குறைகூறுவது ஏற்கதக்கதல்ல.பெரும்பாலான தம்பதியர் அதில் தவறிவிடுகிறார்கள்.
எந்த மனிதனும் பூரணமானவன் அல்ல.மனிதர்களால அமைந்ததுதான் குடும்பம்.எனவே குடும்பமும் முழுமையானது கிடையாது.எந்தக்குடும்பத்திலும் சரியார்வர்களும் உண்டு.தவறானவர்களும்உண்டு.வசதியானவர்களும் இருப்பார்கள்.பஞ்சைப்பராரிகளும் இருக்கவே செய்வார்கள்.முடிந்தால் உதவுங்கள்,அல்லது அவர்களை விட்டுவிலகுங்கள். அவர்கள் குறித்து பேசி, உங்களுக்குள் அடித்துக்கொள்ளாதீர்கள்.
Ôஅவர் எப்படி இருக்கார் பாருங்க...என்பதோ அல்லது அவள் எப்படி இருக்கா பாருஸÕ என  ஓப்பிடுவது இல்லறத்தின் தற்கொலை,.மறக்காதீர்கள்!
 குருஞ்செய்தி அளவுக்குத்தான் இன்றைய பரபரப்பு தம்பதியர் பேசுகிறார்கள்.பேசினால், பிரச்சினை வந்துவிடும் என நினைத்து, பேசாமல்  இருப்பது  நிலமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
உங்கள் இல்லற இணையை கோபப்படவிடுங்கள்...அழவிடுங்கள் பேசவிடுங்கள், தடுக்காததீர்கள். அமைதிப்பொழுததில் தவறுகளை  குத்திக்காட்டாமல், சுட்டிக்காட்டுங்கள். தவறுகள் திருத்திக்கொள்ளப்படக்க்கூடும்.
 அதற்காக பயன்படுத்தும் சொற்கள் தங்கமாக இருக்கட்டும்.காயப்படுத்தும் கற்களாக வேண்டாம். வார்த்தைகளால்  கல்லெறியாதீர்கள், மனக்காயங்கள் ஆறுவதில்லை.உயர்வுமனப்பான்மையோ,  தாழ்வுமனப்பான்மையயோ இல்லறத்தில் இருக்கவே கூடாது.இருந்தால், வாழ்க்கை முள்ளில் விழுந்த பட்டமாகிவடும்.
 பாலியல்உறவு
இல்லறம்பாலியல் உறவுசார்ந்தது. மன இறுக்கம், மனஅழுத்தம் குறைக்கவல்லது பாலுறவு. உடல் மனஆரோக்கியத்தை  இதன்முலம் பெருக்கிக்கொள்ளலாம். பிற மோதலை படுக்கைக்கு கொண்டு செல்வது அபயாகரமானது.இதைக்காரணம் காட்டி அந்தஉறவை ஓத்திவைக்ககூடாது.மனைவி மருத்தால் அதற்கும் வாய்பளியுங்கள்.இந்த உறவால் ஆணைக்காட்டிலும் அவள்தான் அதிகம் பெறுகிறா£ள்.அப்படியும் அவள் மருத்தால் விட்டுக்கொடுங்கள்.வாஞ்சையாக அவள் மனநிலை அறிந்து நடந்துகொள்க.
தம்பதியர் கிண்டல் அடித்துக்கொள்ளுங்கள்.கேலிபேசுங்கள்.எதுவும் செய்யுங்கள்.ஆனால், அன்புமிச்சமிருக்கட்டும்.அதுவே இல்லறத்தின் ஆதாரம்.!

       

கருத்துகள் இல்லை: