மீட்பருக்கான சொற்கள்
கூடை நிறைய சொற்களுடன்
அலைந்தேன்.
அவரவருக்கான சொற்களை
வாங்கிக்கொண்டனர்
சொற்களுக்குள்
மிதந்த மௌனத்தையும்
வாங்கிக்கொண்டனர்
சுமைகளாக இருந்தவைகளை
மௌனத்தில் மூழ்கடிக்க
விலை பேசினார்கள்.
சொற்களின் சாரம் மட்டுமே
சென்றது
சொற்கள் சிக்காமல்
கூடைகளுக்குள் கிடந்தது
ஒரு மீட்பருக்காக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக