பக்கங்கள்

சனி, 25 மார்ச், 2017

'ரஜ்ஜதம்' என்ற சாதியைச் சேர்ந்த தமிழன் ஏராரளன் என்ற பெயரை உடையவன் என்று பொருள்.
'ரஜ்ஜுத' என்பதை 'ராஜா' என்றும் நேரடி பொருளில் ஏற்கலாம். அல்லது' ரஜ்ஜத' என்றால் பொன், வெள்ளி போன்ற உலோகங்களைக் குறிக்கும். வேள் என்ற சொல்லும் கூடவெள்ளி என்ற வேர்ச்சொல்லிருந்து வந்திருக்கலாம்.
வெள் அல்லது வெளிச்சம் என்பது மன்னர்களுக்கு உரியது என்ற பொருளில் வழங்கப்பட்டிருந்கலாம்.
எப்படி பார்த்தாலும் '' ரஜ்ஜதம் இஜு ஜாதி கோ '' என்பதால்' ரஜ்ஜதம்' ஒரு ஜாதிப் பெயராகவே இருந்திருக்கிறது. அது அரச குலத்தையே குறித்தது. பிரபு வர்க்கம் என்று இதை சிங்களத்தில் மொழி பெயர்ததிருக்கிறார்கள். வில்லியம் பேஜர் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததை, சிங்களத்தில் மொழி பெயர்த்தபோது பிரபு வர்க்கம் என்றே மொழி பெயர்த்திருக்கின்றனர்.
-எஸ்.ராமச்சந்திரன்
(கதம்பம். ஜுலை-ஆகஸ்ட்2011)
தமிழ் மரபில் ஏதேனும் ஒரு சமூகக்குழு தங்கள் வரலாற்றை சோழர்களுடன் தொடர்புபடுத்தியிருக்கிறதா என்று பார்த்தால் மிக அண்மைக் காலம்வரையில் நாடார் திருமண வாழ்த்துப் பாடல்களில்
'' தாடாளன் சோழன் தனிச்சோழன் தேசமதில், நாடாண்மைபெற்று நன்மை கிட்டிக்கொண்டவர்கள்'' எனப் பாடப்பட்டது. வலங்கை மாலையில் இதுகுறித்த இடம்பெற்றுள்ளன.வில்லிசையின் தந்தையாக கருப்படும் அருதனக்குட்டி அடிகளாரின் வரலாறும்கூடசோழருடன் மிக நெருக்கமானதாக இருக்கிறது.
அறிஞர்கள் இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும்.
Ramachandran மகாவம்சத்தில் ஏளார என்ற வடிவம் தான் உள்ளது(chapter21 verse 13)damilo என்று தெளிவாக உள்ளது. சோளரட்ட இதா கம்மோ ரஜ்ஜதம் இஜு ஜாதிகோ தமிளோ ஏளாரா நாம் னோ-இதன் பொருள்: சோழ ராஷ்டிரத்திலிருந் து இங்கு வந்த ராஜத ஜாதியைச் சேர்ந்த தமிழன்.
Ramachandran ஏளாரா நாம்னோ என்றால் ஏளாரா என்ற பெயருடையவன் எனப் பொருள். ஏறு போன்ற ஆண்மகன் ஏறாளன். அடலேறு அனைவரும் அறிந்த ஏறு. ஏறு தழுவுதல் குறித்து இப் போதைய நிலையில் விளக்கம் தேவையில் லை. எனவே ஏறாளன் என்பது அத் தமிழ் மன்னன் பெயராக இருந்திருக்கவே வாய்ப்பு உள்ளது. மேலும் மனுநீதிச் சோழன் கதை இவன் மீது சார்த்திச் சொல்லப் படுகிறது(mahavamsa chapter21verses14-18)
ivananthan Muthulingam "எலார" என்பதை எதற்கு தமிழ் என்று "திருகி" கொண்டிருக்கிறீர்கள்?
Sivananthan Muthulingam "சோழ" என்றால் என்ன? சோழப் பொரி விற்றவர்களா? சோழர்கள் தமிழர்களை ஆண்டிருக்கிறார்கள். அது உண்மை. அதற்காக அவர்கள் தமிழர்கள் என்று சொல்வது மிகப் பெரும் தவறு. நாயக்கர்களையும் தமிழர்கள் என்றுதான் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
Ramachandran மகாவம்சம் கி. பி. 5-6ஆம் நூற்றாண்டில் பழைய ஆவணங்கள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட பாலி(பலி,பளி,பாளிஎன்றும் உச்சரிப்பதுண்டு) மொழிநூல். அதில் இருக்கிற வாசகத்தை அப்படியே குறிப்பிட்டேன். பாலியில் எகரக்குறில் இலால
Ramachandran எகரக்குறில் இல்லை. ளகரம் உண்டு. சோள,தமி ள,ஏளாரா -இவ்வழக்கு கள் அதில் உள்ளவை தாம். திருகுவதும் திரிப்பதும் நான் அறியாதவை. என்னுடை ய பொருள் கோடல்ஆய்வு அடிப்படையிலானது. எல்லாளன் என்ற பெயர் வழக்கும் எல்லை அரசன் என்ற பொருள்கோடலும் அண்மைக்காலத்தவை. ஏளாரா துட்டகமுனுவால் வீழ்த்தப்பட்டது,துட்டகமுனுவே ஏளார சொஹன (சமாதிக்கோயிவ
Ramachandran சமாதிக்கோயிலோ உடல் எரிக்கப் பட்டுச் சாம்பல் அடக்கம் செய்யப்பட்ட இடமோ ஆகலாம். அனுராதபுரத்தில்இருந்தது. James t. Rutnam என்பவரால்1987இல் the tomb of elara என்ற விரிவான அரிய கட்டுரை எழுதப்பட்டுள்ளது. வள்ளுவர் குறித்த கதைகளில் இலங்கையு டன் வாணிகம் செய்த ஏலேலசிங்கன் குறிப்பிடப் படுவதுண்டு அப் பெயருடன் சேர்த்து மயங்கியிருக்கலாம்
Sivananthan Muthulingam தமிழ் உட்பட அனைத்து தென் இந்திய பாஷைகளுக்கும் தந்தையான "ஹெல" என்ற பாஷை பற்றிக் கேள்விபட்டிருக்கிறீர்களா?
Ramachandran நம் விவாதம் மொழியி யல் சார்ந்ததன்று.
Sivananthan Muthulingam மொழியியல் இந்த விவாதத்துக்கு கண்டிப்பாகத் தேவையானது.
Ramachandran நெடுங்கல்நாடு என்ற நாட்டுப்பிரிவின் நாடு வாழி வம்சத்தவர் நெடுங்காடி. பந்தளச் சிற்றரச வம்சத்தவர் பந்தளர். பந்தள அரச வம்சத்தில் ஐயப்பன் பிறந்தார் என்பது புராணம்.
Rachinn Rachinn Rachinn ஐயப்பன் குறித்து ஒருவர் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.அவர் நேர்காணல் தி இந்து ஆங்கில நாளிதழில் வாசித்திருக்கிறேன்.



விரும்பு
கருத்து
திருவிதாங்கூர் அரசியலில் சாதிக்களுக்கிடையிலான போராட்டங்கள் குறித்து அடிப்படை அறிவே இல்லாமல் எழுதுகின்றவர்கள் கவனிக்க வேண்டும்.அல்லது இதுபோன்ற போக்குகளை வாசிக்கவாவது செய்வது நல்லது.
// கி.பி.1380 ஆம் ஆண்டில் வேள் நாட்டுச் சமூக அ மைப்பில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. வேளாளர்கள் கூடி, வெள்ளை நாடர் எனப்பட்ட சாதியினர், காரியஞ்செய்தல், கணக்கெழுதுதல், வேணாட்டுச் சமுக அமைப்புக்கு காரணப்படுத்தல், தமிழ்பாகத்தில் பெண்கட்டுதல், பெண்டிரைக் கையாளுதல் போன்றவற்றை முன்புபோலக் கடைபிடித்து வரக்கூடாது என ஆணையிடுகின்றனர்.
இந்த ஆணையை வெள்ளைநாடர்சிலர் தொடர்ந்து மீறி வந்தனர். இப்போக்கு அடுத்த தலைமுறையினரிடையிலும் தொடர்ந்ததால் கி.பி.1406ஆம் ஆண்டில் மீண்டும் வேளாளர்கள்கூடி, தங்கள் ஆணையை மீறி நடந்த கணக்கு கோளரி அய்யப்பன் உள்பட வெள்ளை நாடர் மூவர்க்கு கொலைத்தண்டனை வழங்குகின்றனர். அதன் பிறகும் இத்தகைய போக்கு தொடர்ந்தது.
அடுத்த தலைமுறையைச்சேர்ந்த வேளாளர்கள்1452ஆம் ஆண்டில் கூடி இறுதியாக ஒர் ஆணையை வழங்கி நிறைவேற்றினர். இந்த இறுதி ஆணையை கல்லில் பொறித்து வைத்தனர்.
கொல்லம் ஆண்டு 628 சித்திரைமாதம் 9ஆம் நாள் (கி.பி.1452)பொறிக்கப்பட்ட மேற்குறித்த வேளாளர் ஆணைக் கல்வெட்டுகள்,திருவிதாங்கோட்டின்(பின்னாளைய வேணாட்டின் அரசின் கோநகர்)
ஒன்றும், நெல்லை மாவட்டத்திலுள்ள கல்லிடைச்குறிச்சியில் ஒன்றும் உள்ளன.
இரண்டு கல்வெட்டுகளும் ஒரே செய்தியைக் குறிப்பிட்டாலும், கல்லிடைக்குறிச்சி கல்வெட்டு சற்று விரிவாக உள்ளது. தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டியநாட்டு மக்கள் வாசித்துப் புரிந்து கொள்வதற்கேற்ற வகையில் அக்கல்வெட்டு தமிழில் எழுதப்பட்டதென புரிந்துகொள்ள முடிகிறது. திருவிதாங்கோட்டு கல்வெட்டு வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிற 'காரியஞ்செய்தல்', 'கணக்கெழுதுதல் ' என்பவை செயலர் பதவி, கணக்கர் பதவிக்குரிய செயல்பாடுகள் ஆகும். 'காரணப்படுதல்' என்பது 'காரணப்பாடு' என்ற கூட்டுக்குடும்பத் தலைமைப் பதவிக்குரிய செயல்பாடு ஆகும்.
'காரணப்பாடு' அல்லது 'காரணவன்' என்ற பதவிப்பெயர் ஆழ்ந்த பொருளுடையது.உடலின் ஐம்புலன்களைக் காரணங்கள் என்பர்.கரணங்களை இயக்குகிற உயிரே காரணவன் ஆகும்.'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்பது புறநானூறு.(பா.186) வகுக்கும் இலக்கணம்.
எனவே ,மன்னனைக் காரணவன்எனக் குறிப்பிடுவதுண்டு. கி.பி.1175 ஆம் ஆண்டுக்குரிய இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் திருவாலங்காட்டுக் கல்வெட்டு மதுரைக்கு காரணவரான பராக்ரம பாண்டியர் எனக்குறிப்பிடுகிறது.- //-எஸ்.ராமசந்திரன்
(தமிழினி, ஆகஸ்ட் 2011)
'தாமிரவருணி சமூக பொருளாதார குறித்து எழுதிய பொறிஞர் கோமதி நாயகம் (பழ.நெடுமாறனை சகோதரர்) எங்கிருந்தோ வந்து தேரிக்காட்டில் குடியேறிய ''வெள்ளை நாடான்கள்'' என்பதாக எழுதியிருப்பார். அந்த வெள்ளை நாடான்கள் வந்த கதை இதுதான். தேரிக்காடுகள் இல்லாமல் தமிழகத்தின் மூவேந்தர் வரலாறு முழுமையடையாது.


Ramachandran மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று இருக்க வேண்டும்.
Rachinn Rachinn Rachinn நன்றி! திருத்தி விட்டேன்!
Raja Rishi இதை முழுவதுமாக படித்துப்பாருங்கள் நிறைய விஷயங்கள் பிடிபடும்

Ramachandran அடிக்கோடிடப்பட்டுள்ள கல்வெட்டு வாசகத்தில் உயர்சாதியினர் என்ற தொடர் இல்லை. T. K. Veluppillai அவர்களின் பொருள்கோடல். கி. பி. 1506-1507ஆம் ஆண்டுக் குரிய கல்வெட்டு. Travancore state manual by. V. Nagamaiya,page197 நாடாள்வாமார் பெற்று வந்த படைப்பணம் முதலான அதிகாரங்கள் தொடர்பான செயதுங்க நாட்டு மூத்த திருவடியின் ஆணை குறித்த கல்வெட்டு