பக்கங்கள்

சனி, 25 மார்ச், 2017

'ரஜ்ஜதம்' என்ற சாதியைச் சேர்ந்த தமிழன் ஏராரளன் என்ற பெயரை உடையவன் என்று பொருள்.
'ரஜ்ஜுத' என்பதை 'ராஜா' என்றும் நேரடி பொருளில் ஏற்கலாம். அல்லது' ரஜ்ஜத' என்றால் பொன், வெள்ளி போன்ற உலோகங்களைக் குறிக்கும். வேள் என்ற சொல்லும் கூடவெள்ளி என்ற வேர்ச்சொல்லிருந்து வந்திருக்கலாம்.
வெள் அல்லது வெளிச்சம் என்பது மன்னர்களுக்கு உரியது என்ற பொருளில் வழங்கப்பட்டிருந்கலாம்.
எப்படி பார்த்தாலும் '' ரஜ்ஜதம் இஜு ஜாதி கோ '' என்பதால்' ரஜ்ஜதம்' ஒரு ஜாதிப் பெயராகவே இருந்திருக்கிறது. அது அரச குலத்தையே குறித்தது. பிரபு வர்க்கம் என்று இதை சிங்களத்தில் மொழி பெயர்ததிருக்கிறார்கள். வில்லியம் பேஜர் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததை, சிங்களத்தில் மொழி பெயர்த்தபோது பிரபு வர்க்கம் என்றே மொழி பெயர்த்திருக்கின்றனர்.
-எஸ்.ராமச்சந்திரன்
(கதம்பம். ஜுலை-ஆகஸ்ட்2011)
தமிழ் மரபில் ஏதேனும் ஒரு சமூகக்குழு தங்கள் வரலாற்றை சோழர்களுடன் தொடர்புபடுத்தியிருக்கிறதா என்று பார்த்தால் மிக அண்மைக் காலம்வரையில் நாடார் திருமண வாழ்த்துப் பாடல்களில்
'' தாடாளன் சோழன் தனிச்சோழன் தேசமதில், நாடாண்மைபெற்று நன்மை கிட்டிக்கொண்டவர்கள்'' எனப் பாடப்பட்டது. வலங்கை மாலையில் இதுகுறித்த இடம்பெற்றுள்ளன.வில்லிசையின் தந்தையாக கருப்படும் அருதனக்குட்டி அடிகளாரின் வரலாறும்கூடசோழருடன் மிக நெருக்கமானதாக இருக்கிறது.
அறிஞர்கள் இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும்.
Ramachandran மகாவம்சத்தில் ஏளார என்ற வடிவம் தான் உள்ளது(chapter21 verse 13)damilo என்று தெளிவாக உள்ளது. சோளரட்ட இதா கம்மோ ரஜ்ஜதம் இஜு ஜாதிகோ தமிளோ ஏளாரா நாம் னோ-இதன் பொருள்: சோழ ராஷ்டிரத்திலிருந் து இங்கு வந்த ராஜத ஜாதியைச் சேர்ந்த தமிழன்.
Ramachandran ஏளாரா நாம்னோ என்றால் ஏளாரா என்ற பெயருடையவன் எனப் பொருள். ஏறு போன்ற ஆண்மகன் ஏறாளன். அடலேறு அனைவரும் அறிந்த ஏறு. ஏறு தழுவுதல் குறித்து இப் போதைய நிலையில் விளக்கம் தேவையில் லை. எனவே ஏறாளன் என்பது அத் தமிழ் மன்னன் பெயராக இருந்திருக்கவே வாய்ப்பு உள்ளது. மேலும் மனுநீதிச் சோழன் கதை இவன் மீது சார்த்திச் சொல்லப் படுகிறது(mahavamsa chapter21verses14-18)
ivananthan Muthulingam "எலார" என்பதை எதற்கு தமிழ் என்று "திருகி" கொண்டிருக்கிறீர்கள்?
Sivananthan Muthulingam "சோழ" என்றால் என்ன? சோழப் பொரி விற்றவர்களா? சோழர்கள் தமிழர்களை ஆண்டிருக்கிறார்கள். அது உண்மை. அதற்காக அவர்கள் தமிழர்கள் என்று சொல்வது மிகப் பெரும் தவறு. நாயக்கர்களையும் தமிழர்கள் என்றுதான் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
Ramachandran மகாவம்சம் கி. பி. 5-6ஆம் நூற்றாண்டில் பழைய ஆவணங்கள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட பாலி(பலி,பளி,பாளிஎன்றும் உச்சரிப்பதுண்டு) மொழிநூல். அதில் இருக்கிற வாசகத்தை அப்படியே குறிப்பிட்டேன். பாலியில் எகரக்குறில் இலால
Ramachandran எகரக்குறில் இல்லை. ளகரம் உண்டு. சோள,தமி ள,ஏளாரா -இவ்வழக்கு கள் அதில் உள்ளவை தாம். திருகுவதும் திரிப்பதும் நான் அறியாதவை. என்னுடை ய பொருள் கோடல்ஆய்வு அடிப்படையிலானது. எல்லாளன் என்ற பெயர் வழக்கும் எல்லை அரசன் என்ற பொருள்கோடலும் அண்மைக்காலத்தவை. ஏளாரா துட்டகமுனுவால் வீழ்த்தப்பட்டது,துட்டகமுனுவே ஏளார சொஹன (சமாதிக்கோயிவ
Ramachandran சமாதிக்கோயிலோ உடல் எரிக்கப் பட்டுச் சாம்பல் அடக்கம் செய்யப்பட்ட இடமோ ஆகலாம். அனுராதபுரத்தில்இருந்தது. James t. Rutnam என்பவரால்1987இல் the tomb of elara என்ற விரிவான அரிய கட்டுரை எழுதப்பட்டுள்ளது. வள்ளுவர் குறித்த கதைகளில் இலங்கையு டன் வாணிகம் செய்த ஏலேலசிங்கன் குறிப்பிடப் படுவதுண்டு அப் பெயருடன் சேர்த்து மயங்கியிருக்கலாம்
Sivananthan Muthulingam தமிழ் உட்பட அனைத்து தென் இந்திய பாஷைகளுக்கும் தந்தையான "ஹெல" என்ற பாஷை பற்றிக் கேள்விபட்டிருக்கிறீர்களா?
Ramachandran நம் விவாதம் மொழியி யல் சார்ந்ததன்று.
Sivananthan Muthulingam மொழியியல் இந்த விவாதத்துக்கு கண்டிப்பாகத் தேவையானது.
Ramachandran நெடுங்கல்நாடு என்ற நாட்டுப்பிரிவின் நாடு வாழி வம்சத்தவர் நெடுங்காடி. பந்தளச் சிற்றரச வம்சத்தவர் பந்தளர். பந்தள அரச வம்சத்தில் ஐயப்பன் பிறந்தார் என்பது புராணம்.
Rachinn Rachinn Rachinn ஐயப்பன் குறித்து ஒருவர் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.அவர் நேர்காணல் தி இந்து ஆங்கில நாளிதழில் வாசித்திருக்கிறேன்.



விரும்பு
கருத்து

கருத்துகள் இல்லை: