பக்கங்கள்

செவ்வாய், 19 அக்டோபர், 2010

மீட்பருக்கான சொற்கள்

மீட்பருக்கான சொற்கள்
கூடை நிறைய சொற்களுடன் 
அலைந்தேன்.
அவரவருக்கான சொற்களை
வாங்கிக்கொண்டனர்
 சொற்களுக்குள்
மிதந்த மௌனத்தையும்
வாங்கிக்கொண்டனர்
சுமைகளாக இருந்தவைகளை
மௌனத்தில் மூழ்கடிக்க
விலை பேசினார்கள்.
சொற்களின் சாரம் மட்டுமே
சென்றது
சொற்கள் சிக்காமல்
கூடைகளுக்குள் கிடந்தது 
ஒரு மீட்பருக்காக
 

திங்கள், 18 அக்டோபர், 2010

கவிஞர்களே... வெட்கமாய் இருக்கிறது

                
 மதுரைக்கு தெற்கில் இருந்து   தமிழ் சினிமாவிற்கு வந்த பாடல் ஆசிரியர்கள் குறைவாகத்தான் வந்திருக்கிறார் கள்.இதன் விளைவை தென்மாவட்டித்து காரார்கள் அனுபவிக்கிறார்கள்.பாடல்களின் பொருள் புரியாமல் பாடி  அடி வாங்கியவர்கள் தென்மாவட்டத்து சிருவர்கலகத்தான் இருக்ககூடும். வட தமிழ்நாட்டில் அக்கா மகளை திருமணம் செய்வது சர்வ சாதாரணம்.தென் தமிழ்நாட்டிலும் ஒரு சில சமூகங்களில் அக்கா மகளை திருமணம் செய்தாலும்.இல்லத்து பிள்ளைமார் மற்றும் நாடார்களில்இந்த வழாக்கம் இல்லை.இன்னும் சில சமூகங்களிலும் இது இருக்கலாம்.

நாடார்களில் வடக்கே வந்து செல்கிறவர்கள் ஒருசிலர் கட்டுவதும் நடக்கிறது.அனாலும் மிகவும் குறைவு.இதில்., கவஞ ர்களுக்கு என்ன வந்தது?அவர்கள்தானே  ஏய் அக்கா மகஅவ நடந்துவந்தா, என்றும் அரிசி குத்தும் அக்கமக்லே என்றும் எழுதுகிறார்கள் பொத்தாம் பொதுவாக.இந்த பாடல்களின் பொருள் அறியாமல் சிறுவர்கள் பாடுகிறார்கள்.இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே செல்லும் பெரியவர்கள் சிறியவர்கலை அடிப்பார்கள். அக்கா மகளை குழந்தையாக பாவிப்பதே அந்த மக்களிலின் இயல்பு. ஆனால் இதை அறியாமல் கவிஞர்கள் எழுதுகிறார்கள்.சில சமயங்களில் அக்கா பெண்  குழந்தைகள் அருகில் இருக்கும் நேரத்தில்  எங்கிருந்தோ ஒலிக்கும்  இந்தவகை  பாடல்கள் ஒலிக்க  சங்கட்டமாகி விடுகிறது எமது மக்களுக்கு.கவிஞர்களே உங்களின் செய்கையால் எங்களுக்கு வெட்கமாகி விடுகிறது.இனியாவது இதுபோன்ற பாடல்களை எழுதும்போது எச்சரிக்கையாக இருங்கள்..எங்கள் குரலையும் கேளுங்கள்.அக்காக்களை மாமியாக்குவதும் பாட்டியை மாமியார் ஆக்குவதும் எங்களுக்கு வேதனையளிப்பது.புரிந்துகொள்ளுங்கள்.ஈழ நண்பர் இருவரிடம் அக்கு அக்கா மகளை மணப்பது உண்டா என்று கேட்டேன்.அவர்அக்கா மகளை மணப்பது ஒன்றைத்தான் தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றார் வேதனையுடன்.கேரளாநண்பரிடமும் அதே கேள்வியை கேட்டேன்.பழங்கால தமிழப்பகுதியான கேரளத்திலும் இந்த பழக்கம் இல்லை என்றார்.தமிழகத்தில் குமரியில் முற்றுமுழுதாக அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் இல்லை.எழுதும்பூது இந்த பண்பாட்டு வித்தியாசங்களை அறிந்து கவிஞர்கள் எழுதினால் நன்று.அக்கா மகா முக்கா கொழுந்தி என்ற பழமொழியை படிக்கும்பூதும் இந்த வருத்தம் இருக்கிறது.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

பக்கி


               பக்கி
சென்னையில் ஒருவர் போடா பக்கிப்பயல் என்று ஏசிய பிறகுதான் எங்கள் ஊரில் அந்தச்சொல் வேறு பொருளில் சொல்லாலப்படுவதை அறிந்தேன்.எங்கள் ஊரில்
வண்ணத்து பூச்சியைத்தான் பக்கி என்போம்.பட்டாம்ம்பூச்சி,வண்ணத்துபூச்சி என்ற சொற்களில் பக்கி சொல்லப்படுவதை சென்னைக்கு வந்த பிறகுதான் அறிந்தேன்.
ஈழத்தில் இந்தச்சொல் ஆளப்படுகிறதா இல்லையா என்பது தெரிய வில்லை.ஆனால் தென் தமிழ்நாட்டி ற்கும் குமரி
மிழகத்திற்கும் ஈழத்திற்குமான தொடர்புகள் மிக நெருக்கமானது.இதில் கேரளாவிற்கும் இடம் உண்டு என்பதேஎனதுபுரிதல்.

இதுவும் தமிழ்நாட்டில்தான் :ஆண்களிடம் வரதட்சனை

                 

வரதட்சனை தவறானது எனபதில் கருத்து மாறுபாடு இருக்கமுடியாது.ஒருசில இடங்களில் வரதட்சனை வாங்குவது குறைந்தும் சில இடங்களில் வரதட்சனை அதிகருத்தும் இருப்பது உண்மைதான்.முன்பு நகைகள் தட்டு முட்டு சமாங்களாக இருந்தது.பிறகு கார் பைக் என்று வளர்ந்தது.அதுவும் சென்னை போன்ற நகரங்களில்தான் மருமகனுக்கு கார் பைக் அதிகளவில் வழங்கப்படுகிறது.கிராமத்தில் இது இல்லை,இருந்தாலும்குறைவாகவே  இருக்கும்.சென்னையில் சற்று வசதியான குடும்பங்களில் வீடுகள் வாங்கி கொடுக்கப்படுகிறது.கிராமத்தில் இதற்கு வாய்ப்பே கிடையாது.எந்த பெயரில் என்றாலும் இதைஏற்றுக்கொள்ளமுடியாதுதான். ஆனால் குமரி மாவட்டத்தில் இது இருந்தாலும் அங்குள்ளவர்கள் சற்று மாறியதாக சிந்திக்கிறார்கள்.அவர்கள் பெண்ணை காட்டிக்கொடுப்பதற்கு மாப்பிள்ளையின் பெயரில் நிலம் இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள்.மாப்பிள்ளை பெயரில் நிலம்
இல்லாவிட்டால் பொண்ணு கொடுக்க சம்மதிக்க மாட்டார்கள்.என் நண்பர் ஒருவர் பிரபல த்தொளைக்காட்சியில் செய்திப்பிரிவில் பொறுப்பில் இருக்கிரார்.அவருக்கு பெண் பார்த்தபூது நிலம் இல்லை என்பதால் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர்.இப்படி பலரும் அங்கு நிலம் இல்லாமல் பெண் கிடைக்காமல் வேதனைப்படுவதை சொல்லி கேள்விப்பட்டு இருகிறன்.ஆண்களிடம் நிலம் வேண்டும் என்ற நிபந்தனையும் வரத்சனைதானே?.ஆண்கள் வரதட்சனை கேட்பதுபோலவே இது பெண்கள் கேட்கும் வரதட்சனைதானே.இது தவறு இல்லையா?அதுவும் குமரியில் நிலத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை.கற்றவர்கள் நிரம்பிய மாவட்டத்தில் ஆண்கலிடம் ம் வரதட்சனை கேட்க தொடங்கி இருப்பது சிந்திக்க வேண்டிய விடயமாகவே தோன்றுகிறது.

வியாழன், 14 அக்டோபர், 2010

கேவலமானது

பதிவர்களின் அரசியல் மிகுந்த அலுப்புட்டுகிறது.இவர்களின் மோதலுக்கு  அடிப்படையாக நானா நீயா என்ற  அகங்காரமே இருக்கிறது.பதிவு வரலாறு தொடங்கியதில் இருந்தே  இந்த மோதல் நடந்து வருகிறது.மதம் ஜாதி அரசியல் என விவாதங்களின் அடிப்படைய்டில் மோத்தல் இருந்தால் மகிழ முடியும் ஆனால் அவ்வாறு நிகழாமல் தற்போதைய பதிவுலகம் செயல்படுவதுதான் வீதனையளிக்கிறது.சினிமா பாணி கிசுகிசுக்கள் அளவுக்கு சிலநேரம் இது போய்விடுவது விரக்கியை அளிக்கிறது.சரி தவறுகளுக்கு மத்தியில் தனிப்பட்ட தாக்குதல் கேவலமானது.ஒரு சில எழுத்தாளர்கல் அளவுக்கு பதிவுலகமும் கிழிறங்கி விட்டது.

திங்கள், 11 அக்டோபர், 2010

புட்டான்

புட்டான்
எங்கள் ஊரில்  ஊரில் புட்டான் என்றுதான் தட்டான் அழைக்கப்படுகிறது.கிறிஸ்தவர்கள்
வேதக்காரர்ஆகி விடுவார்கள்.மிதப்பது சமுண்டுபுடுவது ஆகும்.வேதம் என்றுதான் கிறிஸ்தவம் ஈழத்திழும் சேரலத்திலும் குமரியிலும் சொல்லப்படுகிறது.இதுபோன்ற வட்டரவழக்குகல்தான் சிலரின் கண்ணை ஊருத்துகிறது மக்கா.கவனமா இருங்க பாஷையா அழிச்சிடபோறாங்க.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

வெற்றி

கர்நாடக சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் எட்டியுரப்பா வெற்றி.எதிர்கட்சிகள் இந்த வெற்றியை ஏற்க மறுப்பு.எதிர்ப்பு போராட்டம்