பக்கங்கள்

புதன், 6 ஜனவரி, 2010

கவலை

தீ ப்பந்தத்துடன் ஊர்
சுற்றிவரும் அம்மனுக்கு
புதுக்கவலை
என் மக்கள்
என்னிடம்
வர வேண்டும்
புலம்புகிறாள் தீச்சட்டியுடன்

புதன், 30 டிசம்பர், 2009

பாட்டிகள்

இளைச்சி போயிட்டியே
மக்கா
வெற்றிலைக் கறையுடன்
முத்தமிட்டு விசாரிக்கும்
பாட்டிகள் இப்போது
இல்லை

மலரும் தருணம்: கடிதம்

மலரும் தருணம்: கடிதம்

கடிதம்

அப்பாவின் புகைப்படம்போல்
கிடக்கிறது
யாரோ
அனுப்பிய கடிதம்
திறக்கப்படாமல்
நகரின் அறையில்

செவ்வாய், 29 டிசம்பர், 2009