பக்கங்கள்

திங்கள், 18 நவம்பர், 2013

பிட்காய்ன்

கலக்கும் மின்னணு கரன்சி பிட்கொய்ன்

ணம் சிலரால் பிசாசு  என்றும் சிலரால்  கட வுள் என்றும்  கருதப்படுகிறது.பணம்  கடவுளாக இருந்தாலும் பிசாசு ஆக இருந்தாலும் மனிதவாழ்வோடு  பின்னிப்பிணைந்தது பணம்.
 மனிதர்கள் பணத்தோடு  பிணைக்கப்பட்டு  உள்ளனர். அதிலும், இன்றைய மனித்தர்கள் வெறும் நுகர்வோர்களாக மட்டுமே முதலாளித்துவ த்தால் மாற்றப்பட்டுள்ளனர். நுகரும் திறனின் அடிப்படையிலேயே சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கிறது.எது எப்படி இருந்தாலும் இன்றைய உலகில் பணம் இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை.பணம் என்னும் 'மாயமானின் ' பின்னால் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.
    ணத்திலும் பல்வெறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.மின்னணு பொருளாதாரம்போல,இப்போது மின்னணு கரன்சியும் வந்துவிட்டது. பொருளாதரத்தில் பணம் முக்கியமானதாகஇ ருந்தாலும் அதுவும் மாற்றத்தை எதிர்கொண்டுதான் வருகிறது.இன்றைய மின்னணு உ லகில் பொருளாதாரமும் மின்னணு பொருளாதார மாகிவிட்ட்து.


 மின்னணு பொருளாதரத்திற்கு ஏற்றதாக மின்னணு கரன்சியும் வந்துவிட்டது.இதை உருவாக்கியவர் சதோஷி நகமோடோ என்பவர்.ஆனால் இது இவருடைய புனைப்பெயரா நிஜப்பெயரா என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால், அவரது கண்டுபிடிப்பு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

  கடந்த 2008ல் இதை  உருவாக்கிவிட்டாலும் கடந்த நாண்கு ஆண்டுகளாகத்தான் இது பெரியளவில் உலகின் கவனத்தை கவர்ந்துள்ளது..தற்போது பல பன்னாட்டு நிறுவனங் கள் இவரது பிட்கொயி ன் கரன்சியை பாவிக்கதிஊடங்க்கியுள்லன.
இதை பயன்படுத்தத்  தொடங்க்ப்கியுள்ள  உலகின் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றான சீனாவிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியர்களைப் போலவே  சேமிப்புக்கு  முக்கியத்துவம் அளிப்பவர்கள் சீனர்கள். உலகின் முதலாவது பிட்கொய்ன்  இயந்திரத்தை  நிறுவி இருக்கிறா கள்.அடுத்து, ஐரோப்பாவில் முதலாவதாக  பிட்கொய்ன் இயந்திரத்தை சுவிடன் நாட்டில்  ஸ்டாக்ஹோம் நகரில் அமைக்க இருக்கிறார்கள். பிட்கொய்ன் எனபது டிஜிட்டல் கரன்சி ஆகும்.எதிர்காலத்தில் உலகின் கரச்ன்சியாக இது மாறும் வாய்ப்பு இருக்கிறது என்று  நம்பிக்கையோடு கூறுகிறா ர்கள்.
புழக்கத்தில் உள்ல கரன்சிகளின் மதிப்பை அரசுகளும் நாட்டின் தலைமை வங்கிகளும் நிர்ணயிக்கின்றன.ஆனால், இந்த கரன்சியை அரசுகளோ, வங்கிகளோ அல்லது பிற நிதியமைப்புகளோ  கட்டுப்படுத்த முடியாது. உலகின் பிரச்சினைகள் பலவும் பணத்தால் விளைந்ததுதான்.பிட்கொய்ன் புதிய பிரச்சினைகளை உருவாக்கமால் இருந்தால் சரிதான்.
 பயன்பாடு 
 தற்பொது,அமெரிக்க நியுயார்க் அரசு பிட்காய்ன் வர்த்தகர்களுக்கு லைசன்ஸ் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.  வால்மார்ட் போன்ற பிரபலமான பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்த நாணயத்தை அங்கீகரித்து தங்கள் வர்த்த  கத்தில் பயன்படுத்துகின்றன.  சில ஆன்லைன் நிறுவணங்களும் இதை எற்று க்கொள்கின்றன.ஆனால்,சிலர் இதை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.
     பிட்கொய்ன்  
இந்த கரன்சியை தனிநபர்கள் தங்களுக்குள் பயன்படுத்திக்கொள்ளலாம்இதற்கு வங்கிகள் தேவை இல்லை. ஒருவருக்கு ஒருவர் எந்த அறிமுகமும்   இல்லாமலேயே  பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். அமெரிக்க டாலருக்கோ. ஐரோப்பிய நாணயத்திற்கோ  மாற்றிக்கொள்ள முடியும்.

கிரி மினல்கள் 
இதன் மறுபக்கமாக ஆபத்துகளும் இருப்பதை வங்கியியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். கிரிமினல்கள்களும் பயங்கரவாதிகளும்  இதை தவறாக பாவிப்பதற்கு வாய்ப்புகள் மிகுதியாக உள்ளது.
தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு, மெய்நிகர் நாணயபறிமாற்றத்தில்  இறங்கும் அபாயம் இருக்கிறது.மெய்நிகர் உலகில் ஏராளமான தவறான காரியங்களுக்குபயன்படுத்த முடியும்.இபோதைக்கு இதன் செயல்பாட்டில் அரசுகளின் தலையீடு இல்ல்லாமல் சுயேட்சையாக இருந்தாலும் எதிர்காலத்தில் அரசுகள் தங்கள் அதிகாரத்தை  இதில் காட்டலாம்.


      





கருத்துகள் இல்லை: