காணாமல் போகுது கபடி!!!
இந்தியாவில் ஒருசில சில விளையாட்டுகள் பணத்தில் கொழிக்கின்றன.வீரர்கள் வசதியாக வாழ்கிறார் கள்.ஊடக வெளிச்சம் கிடைக்கிறது. சமூகத்தில் நல்ல மதிப்பை பெற முடிகிறது. ஆனால், இந்த மண்ணில் மலர்ந்த பல விளையாட்டுகள் சவலை க் குழந்தைகளாக தங்கள் இருப்புக்கு போராடுகின்றன. கண்டுகொள்வார் யாரும் இன்றி. அழியும் நிலையில்உள்ளன. ஆதரவற்ற மொழிகளாய்...தாவரங்கலாய்...!!!
இந்தியாவில் சில விளையாட்டுகள் போஷாக்குடன் வளர்க்கப்படுகின்றன. குழ்கழ் செல்வம்.செல்வாக்கு என்று குறைச்சல் இல்லை.
இத்தனைக்கும் சூதாட்டம் போன்றவையும் இவற்றில் உண்டு. ஆனால்.சாதாரன மக்களும் அன்றாடங் காய்ச்சுகளும் விளையாடும் கபடி மெதுவாக காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது.கபடியும் கபடி வீரர்களும் ஆதரவற்ற நிலையில் உள்ளன.இத்த்னைக்குமுலக விளையாட்டுகளாக பல நாடுகளிலும் கண்டங்களிலும் விளையாடப்படுகின்றன.இந்தியாவிற்கு சர்வதேச அளவில் பல பரிசுகளையும் கபடியில் பெர முடிந்தது. மூச்சுபயிற்சிக்கும் உடல் வளத்திற்கும் உதவும் இந்த விளையாட்டையும்.வீரர்களையும் ஆதரிக்க
அரசு நிறுவங்களும் தனியார் நிறுவங்களும் முன் வருவதில்லை.
தெற்காசிய விளையாட்டுகளில் ஒன்ராக சொல்வது எனில் தமிழர் விளையாட்ட்டன கபடி தமிழகத்திலேயே மெல்ல காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது.இப்படியே போனால காணாமல் போன விளையாட்டுகளின் பட்டியலில் இதுவும் சேர்ந்துவிடும்.
பாமரர்களின் விளையாட்டான கபடி வீரர்கள் பலர் இன்று தேநீரகங்களிலும் லாரி ஊட்டுனர்கலாகவும் வயிற்றைக்கழுவும் அவலம்தான் இருக்கிறது. இவர்களைப் பற்றி ஊடகங்களில் செய்தி வருவதில்லை.இதனால் இருட்டில் இருக்கிறது இவர்களின் வாழ்க்கை. அரசு பணியில் இருக்கும் கபடி வீரர்களுக்கு பதவி உயர்வும் சுலபத்தில் கிடைக்காது. முன்பு போலிஸ், ரெயில்வே என்று வேலை வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.இந்த வியாளியாட்டில் இருக்கும் பலர் போட்டிகள் நடக்குமிடங்களுக்கு சொந்த பணத்தை செலவழுயத்து போய்ச்செரவேண்டியதுதான். எந்த செலவும் இல்லாமல் கொஞ்சம் இடம் இருந்தால் அதையே மைதானமாக்கி ஆடக்கூடியது.அதிகபட்சம் 45 நிமிடங்களில் போட்டி முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
கடந்த ௩௦ ஆண்டில் அசுரத்தனமாக கிராமங்கள் வரையில் பரவி இருக்கிறது கிரிக்கெட் விளையாட்டு.ஆனால் மண்ணின் விளையாட்டாக இருக்கும் கபடி போன்ற விளையாட்டுகள் கவனிப்பாரில்லாமல் மெல்லத்தேய்கிறது.கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் தொகையில் ஊரு சிறு பகுதியை இதற்கு வழங்க பெரிய நிறுவங்கள் முன் வந்தால் பல ஆயுரம் கபடி வீரர்கள் உருவாகுவார்கள்.முழுநேர வீர்கள் இருந்தால் இன்னும்நிறைய சர்வதேச அளவிலான பேறுகளை வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள்.அதுபோல் கட்சி ஊடகங்களும் இந்த விளையாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.விளையாட்டு வீரன் மக்களின் கைதட்டலையும். பாராட்டுகளையுமே மிகவுமேதிர்பார்ப்பான். ஊடகங்கள் இவர்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்தால் இன்னும் ஆர்வத்தோடு பலர் இந்த விளையாட்ட்டில் ஈடுபடுவார்கள்.
ஒரு புறத்தில் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கி விளையாடும் அளவுக்கு ஒரு சில விளையட்டு வீரர்கள் இருக்க...மறு பக்கத்தில் ஊட்ட்சத்துமிக்க உணவுகள் கூட கிடைக்காமல் அல்லல்படுகிறாக்கள்.பல பள்ளிகளில் கபடி விளையாட்டைநிறுத்திவிட்டார்கள்.கபடிக்கு பெயர்பெற்ற கிராமங்கள் முன்பு இருந்தன.இப்போது அவையும் வேருவிளையாட்டுக்கு மாறிவிட்டன.நானும் வளர்கிறேனே மம்மி?!!!
கபடி ஆவீரர்களை சர்வசாதரணமாக தேநீர் கடையிலோ அல்லது லாரி ஒட்டுனரகவோ பார்க்கமுடியும்.அடிப்படை வசதியும் இல்லாத நிலையிலும் தொடர்ந்து கபடிவிளையாடும் அவர்களை நினைக்கும்போது பெருமிதமாக இருக்கிறது. விளையாட்டுக்கு உண்மையாக இருக்கும் அவர்கள் வறுமையில் தவிக்கிறாக்கள். சூதாட்டத்தில் விளையாட்டை விற்கும் சூதாட்டக்காரர்களை போற்றும் வணிக நிறுவங்களையும் என்னென்பது?!
.பணத்தை குவிக்கும் சச்சின் இந்த நாட்டின் எம்.பி.யாக இருந்துவிட்டு போகட்டும். ஒரு கபடி வீரனுக்கு வேலைவாய்ப்பாவது வழங்கலாமே!!!! முழு நேரமும் விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடுவானே!!!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக