பக்கங்கள்

வெள்ளி, 4 மே, 2012

   துண்டிக்காதிர்கள்
உங்கள் கைபேசியின்
  அடுத்த அழைப்பு
   மரணத்தின்
  அழைப்பாக...
  கடவுளின் அழைப்பாக
     ஒரு
   பாலியல் வெறியனின்
   அழைப்பாக
   மரணத்தை பரிசளிப்பவனதாக
   தொலைந்த போன
   பால்ய சினேகனின்
   அழைப்பாக.
    ஒரு காவலனின்
    அழைப்பாக 
    முன்பொரு காலத்தைய
   காதலன்/காதலள்
    அழைப்பாக
   நிநைவுப்பரப்பில் இருந்து
   நீங்கிப்போனதொரு நாளில்
   தோல்வியை பரிசளித்தவனின் 
     அழைப்பாக
    ஒரு விர்பனையாளினியின்...
     எப்போதோ  நிராகரிக்கப்பட்ட
    ஒருத்தியினதாக இருக்கலாம்.
    அழைப்பை துண்டிக்காதிர்கள்
   செத்துப்போன உங்கள் பால்யத்தின்     அழைப்பாகவும்  இருக்கலாம்.
    எப்போதோ உங்களால் நேசிக்கப்பட்ட
   யாருக்கோ மனைவி/கணவனாகிப்போன
  ஒருவன்/ஒருவளின் அழைப்பாகவும் இருக்கக்கூடும் 

  





கருத்துகள் இல்லை: