மட்டுப்படுத்தல்
மீடியா கட்டுப்படுத்தப்பட வேண்டுமா என்ற கேள்வி பரவலாக எழும்பி வருகிறது.செய்தியகங்கள் ஒன்றும் புனிதம் அல்ல. உண்மையில் புனிதம் இருக்கிறதா என்பதற்கும் இல்லை என்பதே பதிலாக முடியும்!
மநச்சாய்வு-பநசாய்வு,விளம்பர ஆதரவு, கட்சி- மன மயக்கங்கள்,கருத்துச்சார்புகள், செய்தியாளர்களுக்கும் செய்தி நிறுவனங்களை நடுத்தும் முதலாளிகளுக்கும் இருக்கிறது. ஒருவரின் சமூக நிலையை மீடியாதான் உருவாக்குகுகிறது.
முத்திரை குத்துகிறது. ஒருவரை நல்லவராகவோ-வில்லனாகவோமக்களிடம் சித்தரிப்பதும் இதுதான்.
இவ்வாறான சித்தரிப்புகளில் விருப்பம் இல்லையாயினும் செய்திகளை வெளியிடடாமல் இருக்க முடியாத நிலை இருக்கிறது. வாசகனின் ஆர்வத்திற்கும் இதற்கும் தொடர்புண்டு. செய்திகளை வெளியிட்ட பின்னரே அதை மறுப்பவர்களும் மறுக்க முடிகிறது.அவரவர் நிலையில் செய்தி வாசகனால உள்வாங்கப்பட்டு கொண்டாடுவதும்,நிராகரிப்பதும் நிகழ்கிறது.செய்தியை எழுதுகின்ற செய்தியாளன்-செய்தி நிறுவங்களின் நலன்களுக்கும் இதில் பங்குண்டு.சார்பு இல்லாத எந்தச்செய்திகளும் வாசகனுக்கு கிடைக்காது.ஊடகங்களின் சார்புநிலை அறியத்தக்கதுதான்.ஒரே செய்தியை சண்-ஜெயா தொலைக்காட்சிகள் வெளியிடும் தன்மையை தமிழ் வாசகர்கள் நன்கு அறிந்ததே.
ஆனால், ஊடகத்தை கட்டுப்படுத்துவது இதற்கான தீர்வு அல்ல. கட்டுப்படுத்தல் என்பது இன்னும் கூடுதல் சார்புக்குத்தான் ழைத்துச்செல்லும். இதன் காரணமாகவே ஊடக சுதந்திரத்தை வலியுரரூத்த வேண்டியிருக்கிறது. சுய மட்டுறுத்தல் மட்டுமே தேவை!அரசின் கத்தரிக்கு வேலையில்லை. செய்தியை வாசகன் முடிவு செய்யப்பட்டும் அதிகாரத்தின் கத்thiரிகள் அல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக