பக்கங்கள்

திங்கள், 5 மார்ச், 2012

வாடகை வாழ்க்கை


          சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் பற்றிய விவரங்களை காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகர க்காவல் ஆணையாளர் அறிவித்துள்ளார். ஊடகங்கலும் கேள்வியே இல்லமால்  முக்கியத்துவம் கொடுத்து செய்தியை வெளியிட்டுள்ளன. சென்னையில் சொந்த வீட்டில் இருப்பவர்களை காட்டிலும் வாடகைக்கு குடியிருப்பவர்கல் அதிகமாக இருகக்கூடும்.வாடகைதாரர்கள் வாழ அல்ல.  மூச்சுவிடுகிர்ரர்கள்,அவ்வளவுதான். 
            மின்சாரம்,தண்நீர்,முறைவாசல் என கொள்லையடிக்கிர்ரர்கள். அதைக்கட்டுப்படுத்த வக்கில்ல்லாமல் இருக்கிறது அரசாங்கம்.                       சட்டம்  குறித்த அச்சம் வீட்டு உரிமையாளர்களிடம் இல்லை. குடியிருப்பவர்களிடம் வசூல் செய்வதற்கு விதவிதமாக   செயல்படுகிர்ரர்கள்.
         இந்த ஜனவரி மாதத்தில் இருந்து நடுத்தர வீடுகளுக்கு ஆயிரம் ருபாய் வாடகைக்கட்டனத்தை உயர்த்திஇருக்கிறர்கள். சட்டத்தை செயல்படுத்த முடியாத அரசும் போலீசும் இப்போது தங்கள் கையாலாகதனத்தை வாடகைக்கு குடியிப்பவர்களை தங்கல்பங்குக்கு கூடுதலாக நசுக்கத்தொடங்கி இருக்கின்றன. சொந்தவீடு இருப்பவர்கள் கொள்ளையடிக்க மாட்டார்கள் என்று காவல்துறையில் உள்ள ''புத்திச்சாலி'' அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 
இதுவரையில்            சென்னையில் நடந்த குற்றத்தில் சொந்த வீடு இருப்பவர்களின் பங்கு என்ன?வாடகைக்கு குடிருந்ததவர்கள் பங்கு என்ன என்பது குறித்து  தரவுகளை  ஆய்வு செய்ய வேண்டும்.எதோ பிழைப்புக்காக பிறந்தமன்னைவிட்டு அகதியாக இடம் பெயர்ந்து வாழ்கிறர்கள். நகரத்தில்சொற்ப சம்பளம் வாங்கி, பாதியை வாடகைக்கு கொடுத்துவிட்டு  ஒட்டானாண்டியாய் இருப்பவர்களை நகரத்தில் வாழும் ''குற்றப்பரம்பரை'' ஆக்கியிருக்கிறது போலிஸ்.

கருத்துகள் இல்லை: