பக்கங்கள்

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

ஈழத்தமிழர்களுக்கு

                                                ஈழத்தமிழர்களுக்கு
தமிழத் தலைவர்கள் ஈழத்தமிழர்களுக்கு செய்ய வேண்டிய உதவி தமிழக சட்டமன்றத்தில் இலங்கை அரசு மீது போர்க்குற்ற  விசாரணை நடத்த வேண்டும் என்று நடுவன் அரசையும்  பன்னாட்டு சமஊகத்தையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவதுதான்.அப்போதுதான் இந்திய ஒன்றிய அரசு ஈழத்தமிழர் தேசிய இனப்படுகொலை விஷயத்தில் கொஞ்சமாவது தமிழர் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து செயல்படும்.
இந்திய அரசு நிலையை மாற்றிக்கொண்டால் இலங்கை அரசு தானாகவே ஐ. .நா.போர்க்குறற வலையில் சிக்கும் நிலை உருவாகும்.
  ஜெயலலிதா காங்கிரஸ் கஊட்டனிக்கு காத்துக்கொண்டிருக்க ஜெயலலிதாவும் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஊட்டவில்லை  ரக அரசியல்வியாதியான கருணாநிதியும் இதை செய்வதற்கு வாய்ப்பு குறைவுதான். தமிழ் உணர்வாளர்கள் மற்ற மாநிலத்தளைவர்களுடன் தங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட தொடர்புகளை பயன்படுத்தி அந்தந்த மாநிலசட்டமன்றங்களில் இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை செய்ய இந்திய அரசு நடவதிக்கை எடுக்க உதவ வேண்டும் என்று வலியுறத்தி சட்டசபைகளில் தீர்மானங்களை இயற்ற  முயற்சி செய்தால் ஏதாவது  நல்லது நடக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பான முயற்சிகளில் தமிழ் உணர்வாளர்களும்  மனிதஉரிமை ஆர்வலர்களும் இறங்குவது சிறந்தது.கருணாநிதி,ஜெயலலிதா ராமதாஸ் வகையறாக்களை நம்பினால் நாசம்தான்.

கருத்துகள் இல்லை: